காவிரி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் நிதின் கட்கரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என புதுச்சேரியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றிற்காக பங்கேற்க வந்த அவர்,செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது:
மத்திய அரசு தமிழகத்துக்கு பச்சைத் துரோகம் செய்து வருகின்றது. காவிரி தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு கேடான ஒருதலைப்பட்சமான தீர்ப்பு. மேலும் இது தொடர்பாக தமிழகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தது. கசப்பின்மையற்று ஒரே கோரிக்கை வலியுறுத்துவதாக இக்கூட்டம் அமைந்தது. காவிரி மேலாண்மை விவகாரத்தில் 8 கோடி தமிழக மக்களின் ஒரே கோரிக்கையை கேட்க முடியாதவர் பிரதமர் பதவிக்கே தகுதியற்றவர்.
நரேந்திர மோடி கர்நாடக மாநிலத் தேர்தலை நினைவில் வைத்து நமக்கு நேரம் ஒதுக்கவில்லை. காவிரி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் நிதின் கட்கரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago