புதுவை நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய அனைவருக்கும் உரிமையுண்டு: கிரண்பேடி

By செ.ஞானபிரகாஷ்

புதுவை நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய அனைவருக்கும் உரிமையுண்டு. இதில் சபாநாயகர் முடிவைப் பொறுத்தே அனைத்தும் அமையும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.

புதுச்சேரி ராஜ்நிவாஸில் மாலையில் செய்தியாளர்களிடம் நியமன எம்எல்ஏக்கள் தீர்ப்பு தொடர்பாக கூறுகையில், ''நியமன எம்எல்ஏக்கள் விஷயத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு. இதன் மூலம் புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து கூடுதலாக மக்களுக்கு பணியாற்ற இயலும். மக்கள் பிரச்சினை பற்றி பேரவையில் பேச இயலும். இதில் எவ்வளவு விரைவாக சபாநாயகர் எவ்வித முடிவு எடுப்பார் என்பதைப் பொறுத்தே அனைத்தும் அமையும்'' என்றார்.

மனுதாரர் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது தொடர்பாக கேட்டதற்கு, "தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய அனைவருக்கும் உரிமையுண்டு" என்று கிரண்பேடி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்