குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பலியானோருக்கு மலைக் கிராம தோட்டத் தொழிலாளர்கள் அஞ்சலி: எங்களுடன் பழகியதை மறக்க முடியாது என உருக்கம்

By என்.சன்னாசி

குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பலியானோருக்கு மலைக் கிராம தோட்டத் தொழிலாளர்கள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். எங்களுடன் அவர்கள் பழகியதை மறக்க முடியாது என தோட்டத் தொழிலாளர்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கணி மலையில் சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பெண் ஊழியர்கள் உட்பட 24 பேர் கொண்ட குழுவினரும், கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து 12 பேர் அடங்கிய குழுவினரும் மார்ச் 10-ம் தேதி மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

தனித்தனியே மலையேறும் பயிற்சி மேற்கொண்ட இக்குழுவினர் 36 பேர் முதல் நாள் இரவு கொழுக்கு மலை உச்சியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் ஒன்றாகத் தங்கினர். மறுநாள் அதிகாலை மலையைவிட்டு அவர்கள் இறங்கினர்.

ஒத்தமரம் பள்ளத்தாக்கு பகுதியில் ஓரிடத்தில் தங்கி மதியம் உணவு சாப்பிட்டுவிட்டு, கீழே இறங்கியபோது எதிர்பாராது அனைவரும் காட்டுத்தீயில் சிக்கினர். 10 பேர் மட்டும் பள்ளத்தாக்கில் குதித்து உயிர் தப்பினர். மற்றவர்கள் தப்பிக்க வழி தெரியாமல் பாறை இடுக்குகளில் ஒளிந்து உயிர் தப்பிக்க முயன்றனர். ஆனாலும் 9 பேர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றவர்கள் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்கள் தேனி, மதுரை, சென்னை, ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில் தீயில் கருகிய உடல்கள், காயங்களுடன் துடித்தவர்களை மீட்கும்போது, நேரில் பார்த்த கொழுக்கு மலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், மலைக் கிராம இளைஞர்கள் பலியானோர் ஆன்மா சாந்தி அடையும் நோக்கில் சம்பவ இடத்தில் அஞ்சலி செலுத்த திட்டமிட்டனர். இதன்படி, ஐந்துக்கும் மேற்பட்ட கொழுக்குமலை தோட்டத் தொழிலாளர்கள் பூ மாலைகளுடன் கொழுக்கு மலையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள பாறை இடுக்கு பகுதியில் உடல்கள் கிடந்த இடத்தில் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து தோட்டத் தொழிலாளர்கள் கூறியதாவது:

மலையேறும் குழுவினர் அடிக்கடி கொழுக்கு மலை எஸ்டேட் பகுதிக்கு வந்து தங்கி எங்களுடன் உறவினர்கள் போன்று பழகுவர். அவர்களுக்கு நாங்கள் சமையல் செய்து கொடுப்போம்.

குடும்பத்தினர்போல் பழகியதால் எங்களால் உயிரிழந்தோரை மறக்க முடியவில்லை. இதன் காரணமாக 16-ம் நாள் நினைவாக உடல்கள் கிடந்த இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினோம் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்