பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று (மே 23) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே தேசிய அளவில் பாஜக முன்னிலை வகித்தது.
இந்நிலையில், பிற்பகல் நிலவரப்படி பாஜக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியாணா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், காங்கிரஸ் கூட்டணி 90 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. இதனால், மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "2019 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பாமையோடு இரண்டாம் முறை பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகள்" என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago