மக்களவைத் தேர்தல்: அதிக வாக்குகள் பெற்ற டாப் 15 தமிழக வேட்பாளர்கள்

By சி.காவேரி மாணிக்கம்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதற்கான முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழகத்தைப் பொறுத்தவரை, தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில், திமுக கூட்டணி 37 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றது.

இதில், அதிக வாக்குகள் பெற்ற டாப் 15 வேட்பாளர்கள் பற்றிய விவரங்களின் தொகுப்பு இது:

ஸ்ரீபெரும்புதூர் -  டி.ஆர்.பாலு (திமுக) -   7,93,281

திருவள்ளூர் (தனி) - ஜெயக்குமார் (காங்கிரஸ்) - 7,67,292

திண்டுக்கல் - பி.வேலுசாமி (திமுக) - 7,46,523

கள்ளக்குறிச்சி - கவுதம சிகாமணி (திமுக) -  7,21,713

கரூர் - ஜோதிமணி (காங்கிரஸ்) - 6,95,697

காஞ்சிபுரம் - ஜி.செல்வம் (திமுக) - 6,84,004

பெரம்பலூர் - பாரிவேந்தர் (திமுக) - 6,83,697

அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் (திமுக) -  6,72,190

திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை (திமுக) - 6,66,272

கன்னியாகுமரி - எச்.வசந்தகுமார் (காங்கிரஸ்) - 6,27,235

நாமக்கல் - ஏ.கே.பி.சின்ராஜ் (திமுக) - 6,26,293

திருச்சி - திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) -  6,21,285

ஆரணி - விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) - 6,17,760

கிருஷ்ணகிரி - ஏ.செல்லக்குமார் (காங்கிரஸ்) - 6,11,298

சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக) -  6,06,302

வெற்றிபெற்ற 38 வேட்பாளர்களில், 3 பேர் 7 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளும், 12 பேர் 6 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், பெண் வேட்பாளராக ஜோதிமணி மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்