மாலை, இரவில் ‘குளுகுளு’ தட்ப வெப்பநிலை இருந்தும் கோடை காலத்தில் வெறிச்சோடி காணப்படும் பச்சமலை: சுற்றுலா பயணிகள் வருகை மூன்றில் ஒரு பங்காக குறைந்தது

By அ.வேலுச்சாமி

மாலை, இரவு நேரங்களில் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை இருந்தபோதிலும் கோடை காலத்தையொட்டி பச்சமலைக்குச் சுற்றுலா வருவோர் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக 527.61 சதுர கி.மீ. பரப்பளவில் பச்சமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,072 மீட்டர் உயரம் கொண்டஇங்கு வனத் துறையின் கணக்கெடுப்பின்படி சுமார் 154 வகையான பறவை இனங்கள் வாழ்கின்றன.

மேலும், பல்வேறு காலகட்டங்களில் 135 வகை பட்டாம்பூச்சி இனங்களும் வலசை வந்து செல்கின்றன. இது தவிர குறிச்சிமலை, சோபனாபுரம் மண்மலை ஆகிய காப்புக் காடுகளில் மான்கள் வாழ்கின்றன. பருவமழை காலங்களில் மங்களம் அருவி, கோரையாறு அருவி என 2 அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

இங்கு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் கடந்த 2013-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ‘பச்சமலை சூழல் சுற்றுலா' திட்டத்தை அறிவித்தார். இதற்காக ரூ.2.30 கோடி செலவில், அருவிகள் அமைந்துள்ள பகுதிகளை மேம்படுத்துவது, காட்சி கோபுரங்கள் அமைத்தல், சிறுவர் பூங்கா அமைத்தல், மர உச்சி வீடுகள், சுற்றுலாப் பயணிகளுக்கான உணவகம் கட்டுதல், மலையேற்ற பாதைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டம் தொடங்கியபோது சுற்றுலாப் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

கோடை காலங்களிலும் இங்கு குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுவதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். இதன்மூலம் வனத் துறைக்கும் கணிசமான வருவாய் கிடைத்தது. ஆனால் காலப்போக்கில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்த வனத் துறையினர் போதிய ஆர்வம் காட்டவில்லை. புதிதாக பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் செய்து தரப்படாததுடன், அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுக்கான பூங்காங்களைக் கூட முறையாக பராமரிக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து பச்சமலை வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுகுறித்து கிராப்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் கூறும்போது, “குறைந்த பட்ஜெட்டில் குளிர் பிரதேசத்துக்குச் சுற்றுலா செல்லக் கூடிய இடமாக பச்சமலை விளங்குகிறது.

குரங்கனி தீ விபத்தின் தொடர்ச்சியாக, கோடை காலம் முடியும்வரை (மே மாதம் வரை) இங்கு ட்ரக்கிங் செல்வதற்கும் இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவேதான் இம்முறை அங்கு நாங்கள் செல்லவில்லை. எனவே, இங்கு சுற்றுலா மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்த அரசு முன் வர வேண்டும்” என்றார்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கோடைகாலத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பச்சமலைக்கு சுற்றுலா வந்தவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்திருப்பது உண்மைதான். ஆனாலும் அமைதியான சூழலில், சுற்றுலாப் பயணிகள் வழக்கம்போல குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். மழை பெய்யாததால் அருவிகளில் நீர்வரத்து இல்லை. சிறுவர் பூங்காவை சீரமைக்கும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பச்சமலையில் சுற்றுலாப்பயணிகளுக்கு இன்னும் கூடுதலானவசதிகள் செய்து தருவதற்கான திட்டங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கீடுக்காக காத்திருக்கிறோம். கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும்’’ என்றார்.

சுற்றுலா செல்வோர் கவனத்துக்கு

வனத்துறை அதிகாரிகள் மேலும் கூறும்போது, “பச்சமலையில் தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு இருந்தாலும் மாலை, இரவு நேரங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. எனவே பச்சமலைக்கு சுற்றுலா வர விரும்புபவர்கள் 04327-222706 என்ற எண்ணில் துறையூர் வன சரகர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். நாள் வாடகை அடிப்படையில் பச்சமலையில் தங்குமிட வசதிகள் உள்ளன. மர வீட்டுக்கு ரூ.1,500, ஆங்கிலேயர் கால வீட்டுக்கு ரூ.1,000, துயில்கூடத்தில் ஒரு நபருக்கு ரூ.200 என வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவக வசதியும் உண்டு” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்