எய்ம்ஸ் மருத்துவமனையால் கூடுதல் எம்பிபிஎஸ் சீட் இல்லையா?- ஏமாற்றத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு நூறு எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்ட நிலை யில் மதுரைக்கு எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை.

மதுரை அரசு மருத்துவக் கல்லூ ரியில் ஆரம்பத்தில் 183 எம்பி பிஎஸ் இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடந்தது. மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறை, ஆய்வுக் கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைவால் ஆண்டுதோறும் இடங்கள் குறைந்து 155 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர்கள் சேர் க்கை நடந்தது. கடந்த ஆண்டு ஐந்து எம்பிபிஎஸ் இடங்கள் குறைக்கப்பட்டு 150 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடந்தது.

இந்த கல்லூரியில் மருத்துவ பட்ட மேற்படிப்பு, டிப்ளமா, நர்சிங், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகள் உள்ளன. கூடுதலாக நூறு எம்பிபிஎஸ் இடங்களைப் பெற இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் தமிழக அரசு விண்ணப்பித்தது.

இதற்காக ரூ.66 கோடியில் மதுரை மருத்துவக் கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணி நடக்கிறது. இதில் ரூ.36 கோடியில் வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வுக்கூடங்கள், சுமார் 260 பேர் அமரக்கூடிய 6 விரிவுரையாளர் கூடங்கள், தேர்வு மையம், பேராசிரியர், இணை, துணை பேராசிரியர்கள் அறைகள் உட்பட ஒவ்வொரு துறைக்கும் தேவையான கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. மீதம் உள்ள ரூ.30 கோடியில் மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலகம், மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியாக தங்கும் விடுதிகள் கட்டப்படுகின்றன.

இதற்கிடையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் கூடுத லாக நூறு எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் இரண்டு முறை ஆய்வு செய்தனர். அவர்கள் மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகள், நோயாளிகள் வருகை ஆகியவை திருப்தி தெரிவித் ததாகவும், இந்த ஆண்டு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடக்கும் என்றும் மருத்துவக் கல்லூரி நிர்வா கத்தினர் நம்பியிருந்தனர்.

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியுடன் விண்ணப்பித்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் நூறாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனால் அக்கல்லூரியில் இந்த கல்வியாண்டு முதல் ஏற்கெனவே உள்ள 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 250 எம்பிபிஸ் இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடக்கும். ஆனால் பாரம்பரியமிக்க மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வெறும் 150 எம்பிபிஎஸ் இடங்க ளுக்கே மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. அதனால் கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள் என்ற அடிப்படையில் இனி மதுரை அரசு மருத்துவக் கல்லூரியைக் காட்டிலும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கே முக்கி யத்துவம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து மதுரை மருத் துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:

புதிதாக தொடங்கப்பட்ட கரூர் மருத்துவக் கல்லூரிக்கு 150 எம் பிபிஎஸ் இடங்களுக்கும், திரு நெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் மா ணவர் சேர்க்கை நடக்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் 100 இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் முடிந்துவிடவில்லை.

மதுரையை ஒப்பிடும்போது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் இடம் உள்ளது. அதனால் அவர்கள் இந்த இடவசதியைக் காட்டி அனுமதி பெற்றுவிட்டனர். ஆனால், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், மருத்துவமனையிலும் இருக்கிற கட்டிடங்களை இடித்து ஒரே இடத்தில் அனைத்துக் கட்டிடங் களும் கட்டப்படுகின்றன. இட நெருக்கடியில் மருத்துவக் கல் லூரியும், மருத்துவமனையும் செயல்படுகிறது. மேலும் மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடங்கள் தற்போதுதான் கட்டப்படுகின்றன. அதனால், இந்த ஆண்டு இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டாவது கூடுதலாக நூறு எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்து வமனை வருகிறது. அந்த மருத்துவமனையில் எம்பிபிஎஸ், பட்ட மேற்படிப்புகள், பட்டயப் படிப்புகள், நர்சிங் படிப்புகள் தொடங்கப்படும். அந்த மருத்துவமனையைக் காரணம் காட்டிக்கூட மதுரை மருத்துவக் கல்லூரிக்கு 150 எம்பிபிஎஸ் இடங்கள் போதுமானது என்று கிடைக்காமல் போகவும் வாய்ப் புள்ளது என்றார்.15-ம் தேதி டெல்லியில் ஆலோசனை

மருத்துவத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மதுரை மருத்துவக் கல்லூரியில் தற்போது வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருப்பது, சில தாமதமான நிர்வாக தகவல் பரிமாற்றம் ஆகியவற்றாலும் கூடுதல் இடங்கள் அறிவிக்கப்படாமல் இருந்திருக்கலாம். இது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் டெல்லியில் வரும் 15, 16 தேதிகளில் ஆலோசனை நடத்த உள்ளது. இதில் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள் வழங்க முடிவு செய்து அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.

15-ம் தேதி டெல்லியில் ஆலோசனை

மருத்துவத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மதுரை மருத்துவக் கல்லூரியில் தற்போது வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருப்பது, சில தாமதமான நிர்வாக தகவல் பரிமாற்றம் ஆகியவற்றாலும் கூடுதல் இடங்கள் அறிவிக்கப்படாமல் இருந்திருக்கலாம். இது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் டெல்லியில் வரும் 15, 16 தேதிகளில் ஆலோசனை நடத்த உள்ளது. இதில் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள் வழங்க முடிவு செய்து அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்