மக்களின் உழைப்பை உறிஞ்சும் கந்து வட்டி கொடுமையால், பாதிப்புக்கு உள்ளாகின்றனர் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர்.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அவசர தேவைக்கு உறவினர், அக்கம் பக்கத்தினர், தெரிந்தவர்களிடம் கைமாற்றாக பணம் வாங்குவது வழக்கம். இதை பலர் தொழிலாக செய்து வருகின்றனர். கொடுக்கும் பணத்துக்கு குறிப்பிட்ட சதவீதம் வட்டியை நிர்ணயித்து வாங்குகின்றனர். 2-3 சதவீதம் வட்டி விகிதத்தில் பணம் தேவைப்படுவோருக்கு கடன் கொடுக்கின்றனர். சிலர் 10 சதவீத வட்டிக்கு கடன் கொடுக்கின்றனர். அதாவது ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்தால், அதில் ஆயிரம் ரூபாயை பிடித்துக் கொண்டு ரூ.9 ஆயிரம் வழங்குவர். தினமும் ரூ.100 வீதமோ, வாரம் ஆயிரம் ரூபாய் வீதமோ திருப்பி செலுத்த வேண்டும். ஒரு தவணை செலுத்த முடியாமல் போனால், அதற்கும் குறிப்பிட்ட சதவீதம் வட்டி செலுத்த வேண்டும் என்பதே கந்து வட்டி.
மணிநேர வட்டி, மீட்டர் வட்டி, ஜெட் வட்டி என்ற பலவகை வட்டி இதில் அடங்கும். இவற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், தமிழ்நாடு அதீத வட்டி வசூல் தடைச் சட்டம் கடந்த 2003-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுபவர்கள் மீது 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிப்பதற்கான வழிவகை இச்சட்டத்தில் உள்ளது.
இருப்பினும் மக்களுக்கான பணத்தேவை அதிகரித்து வருவது, கந்து வட்டி தொழில் வளர்ச்சி அடையவே செய்கிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் பணப்புழக்கம் குறைவான இடங்களில், ஏழை மக்களை குறிவைத்து நடத்தப்படுகிறது, கந்து வட்டி தொழில் என்று புகார் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கூலி தொழிலாளிகள் மிகக் குறைந்தளவில் வருமானம் பெறும் சூழலில், வட்டி செலுத்த முடியாத நிலையில், ஆட்களை வைத்து மிரட்டுதல், தகாத வார்த்தைகளில் பேசுவது இருசக்கர வாகனங்கள், வீட்டு பத்திரம் போன்றவற்றை பறிமுதல் செய்வது போன்ற அடாவடி செயலில் கந்து வட்டி கும்பல் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் காவல்துறையிடம் புகார் அளிக்க வருவதில்லை. கந்து வட்டி தொழிலை செய்பவர்களில் பலர் அரசியல் பின்புலம் கொண்டவர்களாக இருப்பது இதற்கு காரணம்.
இருப்பினும் புகார்கள் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால், கந்து வட்டி கொடுமைக்கு உள்ளாக்கப்படுபவர்கள், தாங்களாகவே முன் வந்து புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர், காவல்துறையினர்.
இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கூறும்போது, ‘கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்க வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதுடன், விசாரணையின் அடிப்படையில் கந்து வட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 2-3 சதவீதம் வட்டிக்கு கடன் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 10 சதவீதத்துக்கு மேல் வட்டி விதிப்பது, வட்டிக்கு வட்டி வசூலிப்பது சட்டப்படி குற்றம். அதீத வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் நடத்துபவர்கள் கண்டறியப்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago