மதுரை மாநகராட்சி மேயராக இருப்பவர்களுக்காக கட்டிய மேயர் இல்லம் கடந்த 18 ஆண்டுகளாக யாருமே வசிக்காததால் பூட்டியே கிடக்கிறது. அதற்காக மாநகராட்சி செலவிடும் பராமரிப்பு நிதி விரயமாகிக் கொண்டிருக்கிறது.
ஆரம்ப காலத்தில் நகராட்சியாக இருந்த மதுரை கடந்த 1971-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியின் முதல் மேயராக எஸ்.முத்து தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு எஸ்.கே.பாலகிருஷ்ணன், எஸ்.பட்டுராஜன், குழந்தைவேலு, செ.ராமச்சந்திரன், தேன்மொழி கோபிநாதன், வி.வி.ராஜன் செல் லப்பா ஆகியோர் இதுவரை மேய ராக இருந்துள்ளனர்.
மாநகராட்சி மேயராக இருப் பவர்கள், அவர்கள் குடும்பத்துடன் வசிப்பதற்காக அண்ணா நகரில் மேயர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதன் எதிரே துணை மேயருக்கும் தனி இல்லம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு இல்லங்களும் தோட் டம் உட்பட அந்த கால வடிவ மைப்பு மற்றும் வசதியுடன் கட்டப் பட்டுள்ளன.
இந்த இல்லத்தில் கடைசியாக மேயர் குழந்தைவேலு மட்டுமே குடும்பத்துடன் வசித்தார். இவர் பதவியில் இருந்த 1996 முதல் 2001 வரை 5 ஆண்டுகள் தங்கியிருந்தார். அதன்பிறகு மாநக ராட்சி மேயராகவும், துணை மேயரா கவும் வந்தவர்கள் யாரும் மேயர், துணை மேயர் இல்லங்களில் தங்கவில்லை. தற்போது துணை மேயர் இல்லத்தில் உதவி ஆணை யர் ஒருவர் தங்கியுள்ளார். மாநகராட்சி நிர்வாகம், ஒப்பந்த ஊழியர் ஒருவரை நியமித்து மேயர் இல்லத்தைப் பராமரித்து வருகிறது. அவர் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி, வாட்ச்மேன் போன்று பணியாற்றி வருகிறார். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநகராட்சி நிர்வாகம், வீட்டில் பெயிண்டிங் பணியை மேற் கொள்கிறது. யாருமே வசிக் காததால் வீட்டில் உள்ள அறைகள் தூசி படிந்து பாழடைந்து கிடக்கிறது. தற்போது கட்டும் வீடுகளை ஒப்பிடும்போது இந்த இல்லம் நவீன வசதிகள் இல்லாமல் பழமையாகிவிட்டது. அதனால், இனி மேயராக வரப்போகிறவர்களும் இங்கு தங்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில், ‘‘மேயர் முத்து இருக்கும்போது இந்த இல்லம் கட்டப்பட்டது. கடைசியாக மேயராக இருந்த குழந்தைவேலுக்கு பிறகு யாரும் இந்த இல்லத்தில் தங்க மறுத்துவிட்டனர். மேயராக இருந்த செ.ராமச்சந்திரன் இந்த இல்லத்தில் வசிக்கவில்லை. அவர் வசிக்காததால் மாநகர பொறியாளராக இருந்தவர் அந்த 5 ஆண்டுகள் இந்த மேயர் இல்லத்தில் தங்கியிருந்தார். அதன்பிறகு மேயராக வந்த தேன்மொழியும் அங்கு குடியேறவில்லை.
கடைசியாக ராஜன் செல்லப்பா, இல்லத்தின் சாவியை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டார். அவரும், அவரது ஆட்களும் அவ்வப்போது கெஸ்ட் ஹவுஸ் போல் இந்த இல்லத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது முற்றிலும் வீடு பூட்டிக்கிடக்கிறது. யாரும் வசிக்காத வீட்டை எதற்கு மாநகராட்சி பராமரிக்க வேண்டும். அதற்கு பெயிண்டிங், மாதந்தோறும் மின்கட்டணம், பணியாளர் ஊதியம், பராமரிப்பு அனைத்தும் வீண் செலவு. இந்த இல்லத்தை மாற்று பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம்’’ என்றனர்.
மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மேயர் இல்லத்தில் யாரும் வசிக்காததால் மாதந்தோறும் ரூ.100 மட்டுமே மின் கட்டணம் வருகிறது. அதன் பராமரிப்புக்கு ஒரு ஒப்பந்தப் பணியாளரை மட்டுமே நியமித்துள்ளோம். அதனால், அந்த இல்லத்தால் மாநகராட்சிக்கு பெரிய நிதியிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேயருக்கென்று கட்டிய இல்லத்தை மாற்று பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த முடியாது’’ என்றார்.
சென்டிமென்ட் காரணமா?
மேயராக இருந்து இந்த வீட்டில் வசித்தவர்களின் அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இல்லை என்று கூறப்படுகிறது. கடைசியாக மேயராக இருந்த வி.வி.ராஜன் செல்லப்பா இந்த இல்லத்தில் குடியேற திட்டமிட்டு கடைசி நேரத்தில் அந்த முடிவை கைவிட்டார். அதனால், ஏதோ ஒரு சென்டிமென்ட் காரணமாக மேயராக வருகிறவர்கள் இந்த வீட்டில் குடியேறவில்லை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், முன்னாள் மேயருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, ‘‘மேயராக இருப்பவர்கள் பெரும்பாலும் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருப்பதையே விரும்புவார்கள். மேலும், அவர்கள் சொந்த வீடு, மேயர் இல்லத்தைவிட எல்லா வகையிலும் வசதியாக இருந்ததால் இந்த இல்லத்தை அவர்கள் பயன்படுத்த விரும்பவில்லை’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago