10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய மூன்று வகுப்புகளிலும் 100% தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளது மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளின் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு சில பள்ளிகள் 10-ம் வகுப்பிலும் வேறு சில அரசுப்பள்ளிகள் 12-ம் வகுப்பிலும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 2018- 19-க்கான கல்வியாண்டில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளிலும் நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 153 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அதேபோல பிளஸ் 1 வகுப்பில் தேர்வு எழுதிய 178 பேரும் தேர்ச்சி பெற்றனர். 138 பேர் 12-ம் வகுப்புத் தேர்வை எழுதினர். இவர்களில் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
எப்படி இது சாத்தியமானது? என்ற கேள்வியுடன் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில், பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திராவிடம் பேசினோம்.
''ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல புரிதல் இருந்தது முதல் காரணம். பொதுத்தேர்வை எழுதும் அனைவருக்குமே சிறப்பு வகுப்புகள் நடத்தினோம். கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோரும் உணரும் வகையில் செய்தோம்.
விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடந்தன. ஆசிரியர்களும் உற்சாகமாகப் பணிபுரிந்தனர். ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் குடும்பம் போல இருந்தோம். யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. இதனால் சிறப்பான ரிசல்ட்டை அளிக்க முடிந்தது'' என்கிறார் இந்திரா.
என்றாலும் நூற்றுக்கணக்கான மாணவிகளைக் கையாளும்போது எந்த சிரமமும் ஏற்படவில்லையா? என்று கேட்டதற்கு, ''அவ்வப்போது சில பிரச்சினைகள் ஏற்படும். ஓரிருவர் வகுப்புக்கு வராமல் மட்டம் போடுவர். அத்தகைய மாணவிகளை ஆசிரியர்கள் வீட்டுக்கே சென்று அழைத்து வருவார்கள். அவர்களிடம் பேசிப் புரியவைப்போம்.
முந்தைய ஆண்டுகளில் 95,97, 98 என்ற அளவில் தேர்ச்சி வீதம் இருந்தது. இந்த ஆண்டு திட்டமிட்டு அவரவர் வேலையை ஒழுங்காகச் செய்ததால், 100 சதவீதத் தேர்ச்சியை அளிக்க முடிந்தது'' என்று புன்னகைக்கிறார் தலைமை ஆசிரியை இந்திரா.
வரும் ஆண்டுகளிலும் இந்த சாதனை தொடர வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago