சுகாதாரச் சீர்கேட்டால் தவிக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு!

By த.சத்தியசீலன்

கோவை மாநகராட்சி 70-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது, அம்மன்குளம் புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு. இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. அவற்றில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

வாலாங்குளம் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் வசித்த இவர்களுக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இந்தக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், இங்கு சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகவும், நோய் பரவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அம்மன்குளம் புதிய ஹவுசிங் யூனிட் குடியிருப்புவாசிகள் கூறும்போது, "ஆயிரக்கணக்கானோர் வசித்து வரும் இப்பகுதியில், மாநகராட்சிப் பணியாளர்கள் சரிவர குப்பையை அப்புறப்படுத்தாததால், ஆங்காங்கே குப்பை குவிந்துள்ளது. கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கும் அளவுக்கு, கால்வாய்களில் குப்பை அடைத்துக்கொண்டிருக்கிறது. இதனால்,  தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.  கால்வாய்கள் திறந்த நிலையில் உள்ளதால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு, ஈக்கள் உற்பத்தியாகி, நோய்கள் பரவும் நிலை உள்ளது.

குடியிருப்புகளைச் சுற்றிலும் உள்ள திறந்தவெளி சாக்கடைக் கால்வாய்கள் பெரிய அளவுக்கு உள்ளதுடன், அவற்றின் தடுப்புச் சுவர்கள் சிறிய அளவில் உள்ளன.

இதனால் அப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள், சாக்கடைக்குள் தவறி விழுகின்றனர். இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் வாகனங்கள், சாக்கடைக்குள் விழும் அபாயமும் நிலவுகிறது.

இரவு நேரங்களில் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு கொசுக்கடி அதிகரித்துள்ளது. இதனால், இப்பகுதியில் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு மக்கள் உள்ளாகின்றனர். எனவே,  குடியிருப்புகளை சுற்றியுள்ள கால்வாய்களை  தூர்வாரி,  அவற்றின் மீது சிமென்ட் மூடிகள் அமைக்க வேண்டும். முறையாக குப்பையை  அகற்ற நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

குடியிருப்புகளில் உள்ள பிளாஸ்டிக்  தண்ணீர்த் தொட்டிகள், பயனற்றுக் கிடக்கின்றன.  சில தொட்டிகள் சாய்ந்து கிடக்கின்றன. அவற்றை தாங்கிப் பிடிப்பதற்கு வைக்கப்பட்ட இரும்புக்  கம்பிகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. மேலும், எலி, பெருச்சாளி

தொந்தரவாலும் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். வீடுகளின் சமையல் கழிவுகள் முறையாக வெளியேறினால், எலிகள் தொந்தரவு நீங்கும்.

குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, புதர்மண்டிக்  காணப்படுகிறது. அதற்குள் பாம்பு, பல்லி போன்ற விஷப் பூச்சிகள் உள்ளதால், சிறுவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு உபகரணங்களும் இல்லை. புதர்களை அகற்றி, விளையாட்டு உபகரணங்கள் அமைத்தால் சிறுவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், இப்பகுதியில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சில நேரத்தில் விநியோகம் செய்யப்படும் குடிநீரும், குழாய் பழுதால் வீணாகிறது. தண்ணீர் பற்றாக்குறை யால் பெண்கள் தெருக் குழாய்களை தேடி அலையும் அவலம் நீடிக்கிறது. குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.

இதேபோல, அருகில் உள்ள பழைய ஹவுசிங் யூனிட் பகுதியிலும், அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவிக்கின்றனர். தேங்கியுள்ள குப்பை, திறந்தவெளி கழிவுநீர்க் கால்வாய்களால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. சௌரிபாளையத்தில் இருந்து இப்பகுதிக்கு வரும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த சாலையைச் சீரமைக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்