திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான எம்.எஸ்.எம். ஆனந்தனை, திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எனக் குறிப்பிட்டு திருமண பத்திரிகை அடித்து கட்சியினரிடம் விநியோகித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன். இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜானின் தம்பி மகள் திருமணம் நாளை (மே 24) திருப்பூரில் நடைபெற உள்ளது. இதற்காக அச்சிடப்பட்ட திருமண பத்திரிகையில், எம்.எஸ்.எம்.ஆனந்தன் பெயரை குறிப்பிட்டு, ‘திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், திருப்பூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான’ என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுடன், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இது தொடர்பாக அதிமுகவை சேர்ந்த ஜான் கூறும்போது, ‘எம்.எஸ்.எம்.ஆனந்தன் திருப்பூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஆவார் என்ற நம்பிக்கையில், பத்திரிகையில் அச்சிட்டுள்ளோம்” என்றார்.
திருப்பூர் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘இது தொடர்பாக எவ்வித தகவலும் வரவில்லை. இது யாருடைய தவறு என பார்க்கவேண்டும். அதன்பின்னர்தான் முடிவு எடுக்க முடியும்’ என்றார்.
இது தொடர்பாக எம்.எஸ்.எம். ஆனந்தனிடம் கேட்டபோது, ‘இது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது, திருமண பத்திரிகையை நான் பார்க்கவில்லை' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago