1972-ம் ஆண்டு டிசம்பரில் நடந்தது என்ன?

By ஸ்ரீதர் சுவாமிநாதன்

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வரான திமுக தலைவர் கருணாநிதிக்கும் கட்சியின் பொரு ளாளராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. திமுக நிர்வாகிகள் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பொருளாளர் எம்.ஜி.ஆர். வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைக்காக 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார். அப்போது சட்டப்பேரவைத் தலைவராக இருந்த கே.ஏ.மதி யழகன், எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக இருந்தார்.

அப்போது, கட்சித் தாவல் தடை சட்டம் அம லுக்கு வராத காலம். எந்தக் கட்சியில் இருந்தும் எத்தனை எம்எல்ஏ.க்கள் வேண்டுமானாலும் வேறு கட்சிக்குத் தாவலாம். அவர்கள் பதவி பறிபோகாது. இந்நிலையில், கருணாநிதி அரசுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதேநேரம், முன்னெச்சரிக்கையாக எம்.ஜி.ஆர். ஆதரவாளராக இருந்த பேரவைத் தலைவர் கே.ஏ.மதி யழகன் மீது திமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 1972 டிசம்பர் 2-ம் தேதி கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேரவைத் தலைவர் மதியழகன், திமுக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எடுத்துக் கொள் வதாக அறிவித்து எம்.ஜி.ஆரை பேச அழைத்தார். பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முதலில் எடுத்துக்கொள்ள அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

பேரவைத் துணைத் தலைவரான பெ.சீனிவாசன் அவையை நடத்த வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. பேரவைத் தலைவர் இருக் கைக்கு அருகிலேயே பெ.சீனிவாசனுக்கும் இருக்கை போடப்பட்டு இரண்டு பேரவைத் தலைவர்கள் ஒரே நேரத்தில் சபையை நடத்திய கூத்தும் அதைத் தொடர்ந்து அமளியும் ஏற்பட்டது. மதியழகனுக்கு எதிராக அவை முன்னவராகவும் அமைச்சராக வும் இருந்த நெடுஞ்செழியன் (அப்போது திமுகவில் இருந்தார்) கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்கப்பட்டு பேரவைத் தலைவர் பதவியில் இருந்து மதியழகன் நீக்கப்பட்டார். சபையில் நடந்த அமளியில் எம்.ஜி.ஆர். மீது காலணி வீசப்பட்டது. ‘சட்டசபை செத்துவிட்டது’ என்று கூறி எம்.ஜி.ஆர். வெளியேறியதும் பிறகு 1977-ல் முதல் அமைச் சராக அவர் சட்டப்பேரவைக்குச் சென்றதும் வரலாறு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்