கடல் வெப்பநிலை உயர்வால் மன்னார் வளைகுடா பகுதியில் ஆபத்தை சந்திக்கும் பவளப் பாறைகள்

By ரெ.ஜாய்சன்

கோடை வெயிலின் தாக்கத்தால் கடல் வெப்பநிலை அதிகரித்து மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள பவளப்பாறைகள் வேகமாக அழிவை சந்தித்து வருகின்றன.

இந்தியாவில் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பவளப்பாறை காலனிகள் அதிகமாக அமைந்துள்ளன. குழி மெல்லுடலிகள் எனப்படும் பவளப்பாறைகளானது, மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாக மட்டுமின்றி அவற்றின் உணவு மற்றும் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற இடமாகவும் திகழ்கின்றன. மேலும், கடற்கரை பகுதிகளை இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் அரணாகவும் விளங்குகின்றன.

30 சதுர கி.மீ. அழிந்தது

மன்னார் வளைகுடா பகுதியில் 110 சதுர கி.மீ. பரப்பளவில் பவளப்பாறை காலனிகள் இருந்தன. சட்டவிரோதமாக வெட்டி எடுத்தல், முறையற்ற மீன்பிடிப்பு, பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் கடந்த 50 ஆண்டுகளில் 30 சதுர கி.மீ. பரப் பளவில் பவளப்பாறை காலனிகள் அழிந்துவிட்டன. இதையடுத்து பவளப்பாறைகளை வெட்டி எடுக்க மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு தடை விதித்தது.

தற்போது புவி வெப்பநிலை உயர்வு காரணமாக வெளிருதல் (Coral Bleaching) ஏற்பட்டு பவளப்பாறைகள் ஆபத்தை சந்தித்து வருகின்றன. இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடல் வெப்பநிலை வழக்கத்தைவிட உயர்ந்ததே இதற்கு காரணம்.

2 கட்டமாக ஆய்வு

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ஜே.கே.பேட்டர்சன் எட்வர்டு கூறியதாவது:எங்களது ஆய்வு குழுவினர் மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகளை கடந்த ஏப்ரல் 15 முதல் 24-ம் தேதி வரையும், இம்மாதம் 15 முதல் 23-ம் தேதி வரையும் ஆய்வு செய்துள்ளனர்.

கடந்த மாதம் தூத்துக்குடி, மண்டபம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பட்டினம்மருதூர், காரைச்சல்லி தீவு, முயல் தீவு உள்ளிட்ட 8 பவளப்பாறை படுகை பகுதிகளிலும், இம்மாதம் அதே பகுதிகளில் உள்ள வான் தீவு, காசுவாரி தீவு உள்ளிட்ட 9 பவளப்பாறை படுகை பகுதிகள் மற்றும் பாக் வளைகுடா பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

வெளிறுதல் அதிகரிப்பு

தூத்துக்குடி பகுதியில் (வான் தீவு) ஏப்ரல் மாதம் நடத்திய ஆய்வில் பவளப்பாறைகளில் 3 சதவீதம் அளவுக்கு தான் வெளிறி இருந்தது. மே மாதம் இது 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதுபோல் கீழக்கரை பகுதியில் (முள்ளி தீவு) 35 சதவீதம், மண்டபம் பகுதியில் (குருசடை தீவு) 28 சதவீதம், பாக் வளைகுடா பகுதியில் 12 சதவீதம் அளவுக்கு பவளப்பாறை வெளிறுதல் அதிகரித்து காணப்பட்டது.

கடல் வெப்பநிலை குறைந்தால் வெளிறுதல் நின்று, பவளப்பாறைகள் மீண்டும் புத்துயிர் பெறும். ஆனால், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தால் பவளப்பாறைகள் உயிரிழக்க நேரிடும்.

இவ்வாறு ஜே.கே.பேட்டர்சன் எட்வர்டு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்