ஆரணியில் இருந்து மக்களவைக்குள் நுழையும் ‘வாரிசு’

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மக்களவைத் தொகுதி யில் திருவண்ணாமலை, வந்தவாசி (தனி), போளூர், பெரணமல்லூர், மேல்மலையனூர், செஞ்சி ஆகிய 6 சட்டப்பேரவைகள் அடக்கம். பின்னர், கடந்த 2009-ம் ஆண்டில் 15-வது மக்களவைக்கான தேர் தலில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்டன. அதில், வந்தவாசி தொகுதி நீக்கப்பட்டு ஆரணி மக்களவை தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடக்கம்.

கடந்த 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி ஆரணி தொகுதியில் போட்டியிட்டது. அந்த கட்சி சார்பில் களம் இறங்கிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார்.

பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், திமுக கூட்டணி யில் இருந்து காங்கிரஸ் வெளி யேற்றப்பட்டது. இதனால், 2014-ல் நடைபெற்ற மக்களவைத் தேர் தலில் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் போட்டியிட்டது. அப்போது, தனக்கு பதிலாக மகன் எம்.கே.விஷ்ணுபிரசாத்தை களம் இறக்கினார். அப்போது, அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலை வெற்றி பெற்றார். விஷ்ணுபிரசாத் டெபாசிட் இழந்து தோல்வியை தழுவினார்.

இந் நிலையில், பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களை திமுக முன்னெடுத்த போது, காங்கிரஸ் கட்சியும் தன்னை இணைத்துக் கொண்டது. அதன் மூலம், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் கூட்டணி உருவானது. இதில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, ஆரணி மக்களவைத் தொகுதியை பெற்று தனது மகனை மீண்டும் களம் இறக்கினார் எம்.கிருஷ்ணசாமி.

தமிழகத்தில் மாநில உரிமையை மையப்படுத்தி நடைபெற்ற, இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. அதில், ஆரணி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2.30 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம், ஆரணியில் இருந்து மக்களவைக்கு தந்தை எம்.கிருஷ்ணசாமியை தொடர்ந்து அவரது மகனான மருத்துவர் எம்.கே.விஷ்ணுபிரசாத் நுழை கிறார். இவர், தமிழக சட்டப் பேரவையில் கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

17-வது மக்களவையில் எம்.கே.விஷ்ணுபிரசாத் நுழையும் வேளையில், 16-வது மக்களவையில் இடம் பெற்றிருந்த அவரது சகோதரியின் கணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு தோல்வி அடைந்ததால் அன்புமணி ராமதாஸ் மக்களவையில் நுழைய முடியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்