பாஜகவினர் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு: பொன். ராதாகிருஷ்ணன் புகார்

தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலில் பல இடங்களில் பாஜகவினரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்படும் என்றார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

பாஜக நிர்வாகி இல்ல திருமணத்தில் பங்கேற்பதற்காக பொன். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக் கிழமை மதுரை வந்தார். அரசு விருந்தினர் மாளிகையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

உள்ளாட்சி இடைத்தேர்தலில் தமிழகத்தில் பல இடங்களில் திட்டமிட்டே பாஜக வேட்பா ளர்களின் வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளனர். வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யவுள்ளோம்.

100 நாட்களை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடி தலை மையிலான ஆட்சி, இந்தியாவின் 5 ஆண்டு கால வளர்ச்சிக்கான நல்ல தொடக்கம். பிரதமர் மோடி உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, அந்த நாடுகளில் அமல்படுத்தப்பட்டு வரும் நல்ல திட்டங்களை இந்தியாவில் செயல்படுத்த உள்ளார்.

மோடியின் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும். இதை சிலர் விமர்சனம் செய்வதை பாஜகவினர் பொருட்படுத்த வேண் டியது இல்லை என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE