9 வயது சிறுமயை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த மின்துறை ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தைச் சேர்ந்த வினோத் (26) என்பவர் அரசு மின்துறையில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மின்துறையில் மின்சாரக் கட்டண ரீடிங் எடுக்கும் பணியைச் செய்து வரும் இவர் இன்று (புதன்கிழமை) பாகூர் பகுதியில் உள்ள சேலியமேடு என்ற கிராமத்தில் வீடுகளில் ரீடிங் எடுக்கும் பணியை மேற்கொண்டிருந்த போது தனியாக இருந்த 9 வயது சிறுமியிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டு வீட்டுக்குள் சென்று பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வினோத் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததை அடுத்து சிறுமி கூச்சலிட்டதால் அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் மின்துறை ஊழியர் தப்பித்து ஓடினார்.
இச்சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சிறுமியின் பெற்றோர் அருகிலுள்ள பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பாகூர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மின்துறை ஊழியரைக் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago