ரம்ஜான் நோன்பை முன்னிட்டு தேவை அதிகரிப்பால் திராட்சை விலை உயர்வு

ரம்ஜான் நோன்புக்கான தேவை அதிகரித்துள்ளதால் பன்னீர் திராட்சை விலை உயர்ந்துள்ளது.

தமிழக அளவில் பன்னீர் திராட்சை விளைச்சலில் கம்பம் பள்ளத்தாக்கு முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தின் எழுபது சதவீத தேவை இப்பகுதியில் பூர்த்தி செய்யப்படுகிறது. கருப்பு திராட்சை யைப் பொருத்தளவில் காமயக் கவுண்டன்பட்டி, ஓடைப்பட்டி, சுருளிப்பட்டி, கூடலூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித் துள்ளதால் பழத்தின் நிறம் சற்று வெளிரிக்காணப்படுகிறது. இத னால் இவை இரண்டாம் தரமாக மதிப்பீடு செய்யப்பட்டு விலை குறைவாக விற்பனையானது.

இந்த மாதத்தில் பழ விளைச்சல் குறைவாக உள்ளது. இருப்பினும் விலை சற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காரணம், தர்ப் பூசணி, ஆரஞ்சு, ஆப்பிள், வெளி மாநில விதையில்லா பச்சை திராட்சை உள்ளிட்ட பல்வேறு பழங்களின் வரத் துக் குறைந்து வரு கிறது. மேலும் ரம்ஜான் நோன்பு தொடங்கியதால் பன்னீர் திராட் சையின் தேவை பல மடங்கு அதி கரித்துள்ளது. இதனால், இதன் விலை ரூ.25-லிருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. சுருளிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் கூறுகை யில், அரசு அளிக்கும் பந்தல் மானியம் மிக மிகக்குறை வாகவே இருக்கிறது. மிகச் சிலருக்கே இது ஒதுக் கீடு செய்யப்படுகிறது. இவற்றை அதிகரிக்க வேண்டும். விதையில்லா திராட்சையைவிட இது மருத்துவ குணம் கொண் டது. நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இவற்றை அதிக நாள் பாதுகாக்க முடியாது. குளிர்தன்மையினால் பழங்களில் பூஞ்சாணம் ஏற்படும். இதற்காக மருந்து தெளிக்கிறோம். மற்ற விளைபொருட்களைவிட இதில் மருந்து தெளிப்பு குறைவாக உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்