மதுரை மாநகராட்சியில் 5 வார்டுகளுக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் மட்டுமே இருப்பதால் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், தூய்மை நகரங்கள் பட்டியலில் மதுரை தொடர்ந்து பின்தங்கி உள்ளது.
திடக்கழிவு மேலாண்மை, பொது இடங் களின் தூய்மை, மக்களின் கருத்துக் கேட்பு ஆகியவை அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு இந்தியாவின் தூய்மை நகர் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 500 நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு 123-வது இடம் கிடைத்தது. இந்த ஆண்டு 201-வது இடத்துக்குப் பின்தங்கியது.
மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர், ஆய்வாளர் காலிப் பணியிடங்களால் தூய்மை நகரங்கள் பட்டியலில் மதுரை முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,45,700 வீடுகள் இருந்தன. மக்கள் தொகை 20 லட்சத்தை எட்டியுள்ளது. தினமும் 750 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றை அகற்ற 250 வீட்டுகளுக்கு மூன்று துப்புரவுப் பணியாளர்களும், ஒரு வார்டுக்கு ஒரு சுகாதார ஆய்வாளரும் தேவைப்படுகின்றனர். ஆனால் 1997-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 800 துப்புரவு ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தது.
தற்போது 50 சதவீத துப்புரவுப் பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. அதனால் வார்டுகளில் தேவைக்கு ஏற்ற வாறு குப்பைகள் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை நடக்கிறது. மாதம்தோறும் ஒரு வார்டில் விஐபிக்கள் வரும்போது பெரும்பான்மையான துப்புரவுப் பணி யாளர்கள் அந்த வார்களுக்கு தற்காலிகப் பணிக்காக அனுப்பப்படுகின்றனர். அத னால், அன்றைய நாட்களில் மற்ற வார்டுகளில் குப்பைகள் சேகரிப்பு பாதிக் கப்படுகிறது.
ஒரு வார்டுக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் அடிப்படையில் மாநகராட்சியில் 100 சுகாதார ஆய்வாளர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், மாநகராட்சியில் மொத்தம் 20 சுகாதார ஆய்வாளர்கள்தான் பணிபுரிகின்றனர். அவர்களில் 2 பேர் அயல் பணி(டெபுடேஷன்) அடிப்படையில் பணிபுரிகின்றனர். அதனால், 18 சுகாதார ஆய்வாளர்கள்தான் உள்ளனர். இவர்கள் 18 பேரும்தான் நூறு வார்டுகளிலும் குப்பை சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, மாநகராட்சியின் மற்ற சுகாதாரத் திட்டங்கள் செயல்படுத்த வேண்டி உள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை ஊழியர்கள் கூறியதாவது:
மாநகராட்சியில் கடந்த 1996-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒரு வார்டுக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் இருந்தனர். இப்பணியிடங்களை உள்ளாட்சி நிர்வா கத்தின் பரிந்துரை அடிப்படையில் மாநகராட்சி ஆணையாளரே நேரடியாக பணி நியமனம் செய்தனர். தற்போது சுகாதார ஆய்வாளர்கள் ‘அயல் பணி’ (டெபுடேஷன்) அடிப்படையில் மற்ற இடங்களில் பணி மாறுதல் பெற்று வந்தவர்களுக்கு அரசாணை பிறப்பித்து பணி நியமனம் செய்யலாம் அல்லது நகராட்சிகள் நிர்வாக ஆணையர் மட்டுமே நேரடியாக பணி நியமனம் செய்ய முடியும்.
அதனால், 1996-ம் ஆண்டுக்குப் பிறகு நேரடி நியமனம் இல்லாததால் மாநகராட்சியில் 80 சதவீதம் சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் 58 துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே குப்பை தேங்குவது அதிகரித்துள்ளது. மழை நீர் கால்வாய்களில் குப்பைகள் தேங்கி தண்ணீர் செல்லாமல் தொற்று நோய்கள் பரவுகின்றன.
ஒரு வார்டுக்கு ஒரு ஆய்வாளர் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் 2 வார்டுக்கு ஒரு சுகாதார ஆய்வாளராவது தேவை. ஆனால், ஒரு ஆய்வாளர் 5 வார்டுகளை சேர்த்துப் பார்க்கின்றனர். அவர்களால் குப்பை சேகரிப்பை முறையாகக் கண்காணிக்க முடியவில்லை.
தற்போது மக்கும், மக்கா குப்பைகளை தனித்தனியாகப் பிரித்து அவற்றை அந்தந்த வார்டுகளிலே உரமாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை. தகுந்த வழிகாட்டுதல் இல்லாததால் துப்புரவுப் பணியாளர்கள் மனம்போன போக்கில் குப்பைகளை சேகரிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாகனமும் பற்றாக்குறை
நூறு வார்டுகளுக்கும் சேர்த்து குப்பை அள்ள 829 மூன்று சக்கர சைக்கிள் உள்ளது. தற்போது மூன்று சக்கர சைக்கிளை மாற்றி குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள், ஆட்டோக்கள் வந்துவிட்டன. ஆனால், 100 வார்டுகளுக்கும் 117 ஆட்டோக்களே உள்ளன. அதேபோல் 500 பேட்டரி வாகனங்கள் தேவை. ஆனால் 69 மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago