வீட்டு உரிமையாளர், உறவினர், நண்பர்கள் உதவியுடன் முகவரி சான்று இல்லாமலேயே ஆதாரில் முகவரியை திருத்தலாம்: இந்திய தனி அடையாள ஆணையம் நடவடிக்கை

By ச.கார்த்திகேயன்

வீட்டு உரிமையாளர், உறவினர் அல்லது நண்பர்கள் உதவியுடன் முகவரி சான்று இல்லாமலேயே ஆதாரில் உள்ள முகவரியை திருத்தம் செய்து கொள்ளும் வசதியை இந்திய தனி அடையாள ஆணையம் (UIDAI) கொண்டு வந்துள்ளது.

பொதுமக்கள் அரசின் பல்வேறு சமூகநலத் திட்டங்களை பெற ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு சேவைகளை பெற முதல் ஆவணமாக ஆதார் கேட்கப்படுகிறது. அதனால் ஆதார்அட்டையில் சரியான விவரங்கள்இடம்பெற்றிருப்பது அவசிய மாகிறது.

சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெருநகரங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புக்காக அதிகஅளவில் மக்கள் இடம்பெயர்கின்றனர். ஆனால் அவர்களுக்கு உடனடியாக முகவரி சான்று கிடைப்பதில்லை. இதனால் ஆதாரில் முகவரியை திருத்தம் செய்ய முடிவதில்லை.

இதை கருத்தில் கொண்டு, முகவரி சான்று ஏதுமின்றி, வீட்டின் உரிமையாளர், நண்பர்கள் உதவியுடன் ஆதாரில் முகவரியை மாற்றும் புதிய வசதியை யுஐடிஏஐ நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக யுஐடிஏஐ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:ஒருவர் வாடகை வீட்டிலோ, உறவினர் அல்லது நண்பர் வீட்டிலோ குடியேறும்போது, ஆதாரில்முகவரியை திருத்த முகவரி சான்று கட்டாயமாக இருந்தது. அவர்கள் முகவரி சான்று கொடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. அதனால், முகவரி சான்று இல்லாமலேயே ஆதாரில் முகவரியை திருத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் அட்டையே முகவரி சான்றாக கிடைத்துவிடும்.

இந்த சேவையை பெற, வாடகை வீடாக இருந்தால் அதன் உரிமையாளர், அல்லது குடும்ப உறுப்பினர், உறவினர், நண்பர் இவர்களில் நாம் தேர்வு செய்பவரின் ஆதார் முகவரி, நாம் திருத்த இருக்கும் முகவரி ஆகியவை ஒன்றாக இருக்க வேண்டும். நாம் தேர்வு செய்யும் நபர், அவரது முகவரியை, நமக்கு அளிப்பதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். ஆதாரில் திருத்தம் செய்ய விரும்புவோர், முகவரி அளிப்போர் ஆகியோரின் ஆதார் விவரங்களில் கைபேசி எண்களை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

இந்தச் சேவையின் கீழ் ஆதாரில் முகவரியை திருத்த விரும்புவோர் https://uidai.gov.in என்ற இணையதளத்தில் Update Aadhaar என்ற இடத்தில் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் அதில் Update your address online என்ற இடத்தில் கிளிக் செய்ய வேண்டும். முகவரி சான்று இல்லாதோர் பகுதிக்குள் நுழைய வேண்டும். அங்கு முகவரி மாற்ற விரும்புவோர் தனது ஆதார் எண்ணையும், நமக்கு முகவரி வழங்குபவரின் ஆதார் எண்ணையும் அங்கு பதிவு செய்ய வேண்டும்.

அப்போது எஸ்ஆர்என் (Service Request Number) எண் கிடைக்கும். அதைத் தொடர்ந்து முகவரி வழங்குவோரின் கைபேசி எண்ணுக்கு ஒரு இணையதள இணைப்பு வரும். அதை திறந்து, அதில் அவரது ஆதார் எண்ணை பதிவு செய்து, தனது ஒப்புதலை தெரிவிக்க வேண்டும்.

அந்த விவரம் முகவரி மாற்றுபவருக்கு வந்தடையும். பின்னர் எஸ்ஆர்என் எண்ணைக்கொண்டு இணையதளத்தினுள் சென்று விண்ணப்ப முறையை நிறைவு செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து நாம் குறிப்பிட்ட முகவரிக்கு ரகசிய எண் கொண்ட கடிதம் அஞ்சலில் வந்தடையும். அந்த எண்ணை யுஐடிஏஐ இணையதளத்தில் பதிவுசெய்தவுடன், ஆதாரில் புதிய முகவரி இடம்பெற்றுவிடும். இதுநகர்ப்புறங்களுக்கு குடிபெயர்வோருக்கும், வீடு மாறுவோருக்கும் வசதியாக இருக்கும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்