10-ம்வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் பின்னடைவு: 7-ல் இருந்து 25-வது இடத்திற்கு சென்ற தேனி மாவட்டம்

By என்.கணேஷ்ராஜ்

தேனி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் கடந்த ஆண்டு 7-வது இடத்தில் இருந்த தேனி இந்த ஆண்டு 25-வது இடத்திற்குச் சென்றுள்ளது.

தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் என்று மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் 203 பள்ளி மாணவ, மாணவியர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

8,104மாணவர்கள், 7754மாணவியர் என மொத்தம் 15ஆயிரத்து 858பேர் பங்கேற்றதில் 7ஆயிரத்து 404மாணவர்கள், 7ஆயிரத்து 424மாணவியர் என மொத்தம் 14ஆயிரத்து 828பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 93.55ஆகும்.

கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த தேனி இந்த ஆண்டு 4 சதவீத தேர்ச்சி சதவீதம் குறைந்து 25வது இடத்திற்குச் சென்று விட்டது. கடினமான கேள்வித்தாள், தேர்வில் தீவிரமான கண்காணிப்பு போன்றவற்றினால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

22அரசுப்பள்ளிகள், 6கள்ளர் பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடர் பள்ளி என மொத்தம் 29 அரசுபள்ளிகளும்,  55 தனியார், உதவி பெறும் பள்ளிகளும் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

கணிதம், அறிவியலில் தலா 4பேர் முழுமதிப்பெண்ணும், சமூகஅறிவியலில் 32 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்