முன்பு கிராமங்களிலும் நகரங் களிலும் தேர்தல் வந்தால் மைக் செட் நடத்துவோருக்கு நல்ல வருவாய் கிடைக்கும். ஆனால், ஒலி மாசுபாடு ஏற்படுவதாகவும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி நகர் பகுதிகளில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடைவிதிக் கப்பட்டது. கடந்த 2 தேர்தல்களிலும் தற்போது நடைபெறும் மக்க ளவைத் தேர்தலிலும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தேர்தல் ஆணையம் நகரப் பகுதிகளில் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் தடைவிதித்துள்ளது.
நகரப் பகுதியானாலும் கிராமமானாலும் பெட்டி வடிவி லான ஒலிபெருக்கிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், பல ஆண்டுகளாக பயன் படுத்தப்பட்டு வந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்பாடற்ற நிலையில் கடைகளிலும் மைக்செட் நிறுவனங்களிலும் கிடக்கின்றன.
இதுகுறித்து, விருதுநகரிலுள்ள ஒலிபெருக்கி நிலைய உரிமை யாளர் ஜி.பாண்டி கூறியதாவது: மைக்செட் என்றாலே முன் பெல்லாம் கூம்புவடிவ ஒலி பெருக்கியைத்தான் பயன்படுத்தி வந்தோம். கிராமப்புறங்களில் திருவிழாக்களில் இவைதான் பெரிதும் பயன்படுத்தப்படும். ஒரு சைக்கிளில் 4 அல்லது 5 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை எடுத்துச் சென்று விடலாம்.
மைக் செட் அமைக்க நாள் வாடகை அதிகபட்சம் சுமார் ரூ.2 ஆயிரம்தான். ஆனால் தற்போது பெட்டி வடிவ ஒலிபெருக்கிகளை எடுத்துச் செல்ல சிறிய சரக்கு வாகனத்தை பயன்படுத்த வேண்டி உள்ளது. ஒலிபெருக்கிக்கு தேவையான கட்டுப்பாட்டு கருவிகளும் வாங்க வேண்டும். பெட்டி வடிவ ஒலிபெருக்கிகள் பழுதானால் செலவும் அதிகம். எனவே, ஒலியின் அளவுக்கு ஒரு கட்டுப்பாடு விதித்து மீண்டும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதித்தால் மூலையில் உறங்கிக்கொண்டிருக்கும் கூம்புவடிவ ஒலிபெருக்கியுடன் எங்களைப்போன்றோர் வாழ்வும் ஒளிபெறும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago