ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக-திமுக-அமமுக இடையே கடும் போட்டி

By ந. சரவணன்

ஆம்பூர் தொகுதியை கைப்பற்ற அதிமுக, திமுக, அமமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் 10 பேர் களத்தில் இருந்தாலும், அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்களிடையே மும்முனை போட்டி நிலவு கிறது. அதிமுக சார்பில் மாதனூர் ஒன்றிச்செயலாளர் ஜோதிராமலிங்கராஜா, திமுக சார்பில் பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியச் செயலாளர் அ.செ.வில்வநாதன், அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ பாலசுப்பிரமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வமணி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கரீம்பாஷாவும் போட்டியிடுகின்றனர்.

இவர்களை தவிர சுயேச்சை வேட்பாளர்களாக அதிமுக அதிருப்தி வேட்பாளர் ஷோபா பாரத் உட்பட மொத்தம் 10 பேர் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளராக ஜோதிராமலிங்க ராஜா அறிவிக்கப்பட்டதும் ஏற்கெனவே வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்திருந்த சிலர் ஏமாற்ற மடைந்ததுடன் மறைமுகமாக எதிர்ப்பை காட்டத் தொடங்கி விட்டனர். அதேபோல், பேர்ணாம் பட்டு ஒன்றியத்தை சேர்ந்த திமுக வேட்பாளர் வில்வநாதன் ஆம்பூர் தொகுதியில் நிறுத்தப்பட்டதால் உள்ளூர் திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். அமமுக சார்பில் போட்டியிடும் பாலசுப்பிரமணி இதை தனக்கு சாதகமாக்கி பிரச்சாரத்தை மேற் கொண்டுள்ளார்.

அதிமுகவினர் ஜோதி ராமலிங்கராஜாவை ஆதரித்து பிரச்சாரத்தை இன்னும் வேகப் படுத்தவில்லை. வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுவதால், ஆம்பூர், வாணியம்பாடி சட்டப் பேரவை தொகுதிகளின் வெற்றிக்காக துரைமுருகன் தனது முழு அரசியல் பலத்தை இறக்கி தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார்.

ஆம்பூரை பொறுத்தவரை வெற்றி, தோல்விகளை சிறு பான்மையின மக்களின் வாக்கு கள்தான் தீர்மானிக்கின்றன.

இந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜக இருப் பதால் இஸ்லாமியர்களும், சிறுபான் மையின மக்களும் அதிமுகவுக்கு சாதகமாக இருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல், அமமுக சார்பில் போட்டியிடும் பாலசுப்பிரமணியம் ஏற்கெனவே ஒரு முறை வாய்ப்பளித்தும் அவர் தொகுதிக்கு செய்த களப்பணி குறித்து மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தொழிற்சாலைகள் நிறைந்த ஆம்பூர் நகரத்தில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் பல தொழில்கள் முடங்கிப்போனதால், ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

குறிப்பாக, ரெட்டித்தோப்பு பகுதியில் ரயில்வே மேம்பாலம், பாலாற்றில் மணல் கொள்ளை, ரசாயனக் கழிவுநீர்கள் பாலாற்றில் கலக்காமல் தடுப்பது, சிறு குறு தொழில் மேம்படுத்த நடவடிக்கை, அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக, அதிமுக, அமமுக கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்து அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்