மலைக்கோட்டை மக்கள் கை கொடுக்கப் போவது யாருக்கு?- காங்கிரஸ், தேமுதிக அமமுக தீவிரம்

By அ.வேலுச்சாமி

மும்முனைப் போட்டி நிலவும் திருச்சி மக்களவைத் தொகுதியில் முதலிடத்தைப் பிடிக்க காங்கிரஸ், அமமுக, தேமுதிக வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருச்சி மக்களவைத் தொகுதி யில் காங்கிரஸ் கட்சி சார்பில் சு.திருநாவுக்கரசர், தேமுதிக சார்பில் டாக்டர் வி.இளங்கோவன், அமமுக சார்பில் சாருபாலா ஆர்.தொண்டைமான், நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்.வினோத், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆனந்தராஜா உள்ளிட்ட 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவனுக்கு ஆதர வாக உள்ளூர் அமைச்சர்கள் என். நடராஜன், எஸ்.வளர்மதி, எம்.பி. ப.குமார் ஆகியோர் வாக்குசேகரிப் பில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, விஜய காந்த் மகன் விஜயபிரபாகரன் ஆகி யோரும் பிரச்சாரம் செய்துள்ளனர்.

இளங்கோவன் பேசும்போது, "பாஜகவே மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும். மாநிலத்திலும் அதிமுக ஆட் சியே நீடிக்கும். எனவே, இக்கூட்ட ணியைச் சேர்ந்தவர் என்பதால் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பல்வேறு திட்டங்களைத் திருச்சிக்கு பெற்றுத் தருவேன்" என்றார்.

42 ஆண்டு மக்கள் பணி

காங்கிரஸ் வேட்பாளர் சு.திரு நாவுக்கரசருக்கு ஆதரவாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பிரச்சார பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். இவருக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தி.க.தலை வர் கி.வீரமணி ஆகியோர் பேசி யுள்ளனர்.

திருநாவுக்கரசர் தனது பிரச் சாரத்தின்போது, "27 வயதிலேயே எம்எல்ஏ, துணை சபாநாயகர் ஆனவன். தொடர்ந்து 6 முறை எம்எல்ஏ, 2 முறை எம்பி, மத்திய, மாநில அமைச்சர் என பல்வேறு பதவிகளில் 42 ஆண்டுகளாக மக்க ளுக்காக பணியாற்றி வருகிறேன்.

திருச்சியிலும் மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்தால் புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு வழிவகுப்பேன். திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களைக் கொண்டு வருவேன்" என்றார்.

மண்ணின் மகள் நான்...

அமமுக சார்பில் போட்டியிடும் சாருபாலா ஆர்.தொண்டைமான் ஏற்கெனவே 2 முறை திருச்சி மாநகராட்சியின் மேயராக இருந்தவர். காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். எனவே, இம்முறை வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரத்துக்கு வந்து சென்ற பிறகு, அக்கட்சியினர் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர். பிரச்சாரத்தில் சாருபாலா பேசும்போது, "தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் தர்மபுரியிலிருந்து 20 நாட்கள் விடுமுறையில் திருச்சிக்கு வந்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசரும் இத்தொகுதிக்கு சம்பந்தமில்லா தவர். இவர்கள், தேர்தல் முடிந் ததும் அறையைக் காலி செய்து விட்டு தங்களது ஊர்களுக்குச் சென்றுவிடுவார்கள்.

ஆனால், நான் இந்த மண்ணின் மகள். காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டி விவசாயிகளுக்கு நீர் ஆதாரம் கிடைக்க வழி வகுப்பேன். திருச்சிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர பாடுபடுவேன்" என்றார்.

திருச்சி தொகுதியில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக ஆகிய 3 கட்சிளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுவதால் முதலிடத் தைப் பிடிக்க, 3 கட்சிகளுமே தீவிரப் பிரச்சாரத்தில் களமிறங்கி யுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்