திண்டுக்கல்லில் ராமதாஸ் பிரச்சாரம் பலன் தருமா?

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆளும் கட்சி மீது கோபத்தில் உள்ளீர்கள். நீங்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் உங்கள் கோரிக்கை நிறைவேறாது. அதிமுக கூட் டணிக்கு வாக்களித்தால் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் உங் கள் கோரிக்கைகள் குறித்துப் பேசி நிறைவேற்றித் தருகிறேன், எனக்கூறி ஆதரவு கேட்டார். கோபால்பட்டியில் பேசும் போது, கிறிஸ்தவ வன்னியர்கள், தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர் ஆகி யோரை சமாதானப்படுத்த ராம தாஸ் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்குமா எனத் தெரியவில்லை. அமைச்சர் திண்டுக்கல் சி.சீனி வாசன் கன்னிவாடியில் பேசும் போது மாம்பழம் சின்னத்துக்குப் பதிலாக ஆப்பிள் சின்னத்தில் வாக்குக் கேட்டது மக்களிடையே பரவலாக பேசப்பட்டது. இதனால் ராமதாஸ் பிரச்சாரம் திசை திருப்பப்பட்டு அமைச்சரின் பேச்சு முன்னிலை பெற்றது. திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் ராமதாஸ் பிரச்சாரம் செய்தது அந்தக் கட்சி வேட்பாளருக்கு எந்த அளவில் கைகொடுக்கப் போகிறது என்பது தேர்தல் முடிவைப் பொருத்துதான் தெரிய வரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்