புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் உருவாக்கக் கோரிக்கை வலுத்து வருகிறது. இது குறித்து உறுதி அளிக்க முடியாமல் சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்), ஹெச்.ராஜா (பாஜக) மவுனம் காக்கின்றனர்.
புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் கொளத்தூர், அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஆரம்பத்தில் இருந்தன. ஆனால் தொகுதி மறுசீரமைப்பின்போது புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி இல்லாமல் போனது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, விராலிமலை, அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் ஆலங்குடி,திருமயம் ஆகிய தொகுதிகள்சிவகங்கை மக்களவைத் தொகுதியிலும், விராலிமலை தொகுதி கரூர்மக்களவைத் தொகுதியிலும், அறந்தாங்கி தொகுதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலும், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியிலும் உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகள் இருந்தும் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மறைந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். தொகுதி மறுசீரமைப்பு செய்ததில் இருந்து புதுக்கோட்டை மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தத் தேர்தலில் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் உருவாக்கக் கோரிக்கை வலுத்து வருகிறது.
இதை முதல் கோரிக்கையாக ஆலங்குடி, திருமயம் ஆகிய தொகுதிகளில் வாக்கு கேட்டுச் செல்லும் கார்த்தி சிதம்பரம், ஹெச்.ராஜாவிடம் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதை நிறைவேற்றுவது குறித்து உறுதியளிக்க முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். இதேநிலைதான் திருச்சி, கரூர், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago