நகரப் பகுதிகளில் தடை இருந்தாலும், கிராமப்புறங்களில் வழக்கம்போல சுவர் விளம்பரம் களைகட்டியுள்ளது. ‘என் பெயரை சின்னதா போட்டிருக்கான்.. உன் பெயரை பெரிசா போட்டிருக்கான்..’ என்பதுபோன்ற லடாய்களுக்கும் பஞ்சமில்லை.
வட மாவட்டங்களின் சில பகுதிகளில் திமுக கூட்டணி கட்சி சுவர் விளம்பரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் பொன்முடி மகன் கவுதம சிகாமணி போட்டியிடுகிறார். இங்கு திமுக சார்பில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களில் திருமாவளவன் பெயர் இல்லை. கடலூர் தொகுதியில் திமுக சார்பில் டிஆர்விஎஸ் ரமேஷ் போட்டியிடுகிறார். பல இடங்களில் இவருக்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களில் ராகுல், சோனியா மட்டுமின்றி வேல்முருகன் பெயர்கூட இருக்கிறது.
ஆனால், திருமாவளவன் பெயர் இல்லை.
இதுபற்றி திமுக தேர்தல் பணிக் குழுவினரிடம் கேட்டபோது, ‘‘சுவர் விளம்பரம் எழுதுவது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளின் பொறுப்பு. அவர்கள் அந்தந்த ஊருக்கு ஏற்ப எழுதுவார்கள். வீட்டு உரிமையாளர்கள்கூட பெயர் எழுத எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம். மற்றபடி உள்நோக்கம் எதுவும் இல்லை’’ என்றனர்.
‘‘திருமாவளவன் பெயர் பெரும்பாலான இடங்களில் எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் விட்டுப் போயிருக்கலாம்’’ என்கின்றனர் அக்கட்சியினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago