மதுரையில் இப்படியும் தேர்தல் விழிப்புணர்வு: மை தடவிய விரலை காட்டினால் ஓட்டலில் 10% தள்ளுபடி

வாக்குப்பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரையில் நேற்று ‘டெம்பிள் சிட்டி’ நிறுவனம் நடத்தும் 12 ஓட்டல்களில் வாக் களித்ததற்கு அடையாளமாக மை தடவிய விரலைக் காட்டிய வாக்காளர்களுக்கு அவர்கள் சாப்பிட்ட தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டது.

மக்களவைத்தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம், பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தது. தனியார் நிறுவனங்களும், தன்னார்வலர் களும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மதுரையில் சித்திரைத் திருவிழா நடப்பதால் தேர் தலில் வாக்குப்பதிவு குறையும் அபாயம் இருந்தது. அதனால், மதுரை ‘டெம்பிள் சிட்டி’ நிறுவனம், மாட்டுத்தாவணி, வாடிப்பட்டி ரோடு, திண்டுக்கல் ரோடு, மேலூர் ரோடு, உத்தங்குடி உள்ளிட்ட 12 இடங்களில் தாங்கள் நடத்தும் ஓட்டல்களில் வாக்குச் செலுத்தியதற்கு அடையாளமாக மை தடவிய விரலைக் காட்டினால் சாப்பிட வருவோருக்கு 10 சதவீதம் பில் தொகையில் தள்ளுபடி வழங்கியது.

இதுகுறித்து டெம்பிள் சிட்டி ஓட்டல் உரிமையாளர் குமார் கூறுகையில், நேற்று பிற்பகல் 1 மணி வரை வாக்களித்துவிட்டு எங்கள் ஓட்டலில் சாப்பிட வந்த 1,000 பேருக்கு பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங் கினோம். இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவோடு மக் களவைத்தேர்தலும் வந்ததால் வாக்குப்பதிவு குறையும் என சந்தேகம் எழுந்தது. அதனால், வாக்குப்பதிவை அதிகரிக்க, பில் தொகையில் தள்ளுபடி வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதன் மூலம் 1 சதவீத வாக்குப்பதிவு அதிகரித்தால்கூட ஓட்டல் தொழில் செய்யும் எங்களுக்குப் பெருமைதான்,என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE