தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளுக்காக திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில்13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்க உத்தரவிட்டு கடந்த டிசம்பர் 15-ம் தேதி தீர்ப்பளித்தது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும் செல்லாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 18-ம்தேதி தீர்ப்பளித்தது.
இந்நிலையில் வேதாந்தா குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நாங்கள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க போதிய நேரம் இல்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் விரைவாக விசாரிக்க மறுத்து வருகிறது. இதனால் ஆலையை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆலையை பராமரிக்காத காரணத்தால் தினமும் ரூ. 5 கோடி அளவுக்கு எங்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, ஆலையை பராமரிப்பு பணிகளுக்காக திறக்க அனுமதிக்க வேண்டும். மேலும், எங்கள் மனு மீதான விசாரணையை விரைந்து நடத்த சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ``ஏற்கெனவே கழிவுகளை அகற்ற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அதனை மீறி உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது. இனியும், இதுபோன்று வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும்” எனக் கூறி, வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago