தேர்தல் என்றாலே ஆட்டோவில் ஸ்பீக்கரை கட்டிக்கொண்டு, உங்கள் வாக்கு எங்க வீட்டு பிள்ளைக்கே, மறந்து விடாதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள், நமது சின்னம், நம்மை வாழவைத்த சின்னம் என பலவிதமாகப் பேசி வாகனங்களில் சென்று பிரச்சாரம் செய்ய வழக்கமாக ஆண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து ஆட்டோ சின்னத்துக்கு வாக்கு கேட்டு 10 இளம்பெண்கள் ஆட்டோக்களில் மைக் பிடித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்காக பள்ளி, கல்லூரியில் பேச்சுப் போட்டியில் சிறந்து விளங்கிய மாணவிகளை தமாகாவினர் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.
தமாகாவின் ஆட்டோ சின்னத்துக்கு வாக்கு கேட்டு இந்த இளம்பெண்கள் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வலம் வருவதை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
தாய்மார்கள், விவசாயிகளின் நலன்கள் காக்கப்பட ஆட்டோ சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கேட்டபடி தஞ்சாவூரில் நேற்று வலம் வந்த தஞ்சை ரெட்டிபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சபீதாவிடம், இளம்பெண்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு கல்லூரிப் படிப்பை தொடங்க உள்ள நிலையில் வீட்டில் சும்மாதான் இருந்தேன்.
ஊரில் நடக்கும் பட்டிமன்றம், பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்வேன். இந்நிலையில், அரசியல் கட்சிக்கு ஆட்டோவில் மைக்கில் பேசியபடி தொகுதி முழுக்க சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என தமாகாவைச் சேர்ந்தவர்கள் கேட்டார்கள். என் தந்தையும் அதே கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், அவரும் ஓகே சொல்ல 10 நாட்களாக ஆட்டோவில் பிரச்சாரம் செய்து வருகிறேன். செலவுக்கு பணம் தருகிறார்கள்.
வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளி உலகத்தை புரிந்துகொள்ளவும் இது ஒரு வாய்ப்பாக உள்ளது. என்னைப் போல 10 இளம்பெண்களும் இதேபோல ஆட்டோ சின்னத்துக்கு வாக்கு கேட்டு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் ஆட்டோவில் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago