திருப்பூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்புராயன் களம் காண்கிறார்.
இதற்கிடையே இன்று காலை தொடங்கி வாக்குப் பதிவு திருப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் முருங்கப்பாளையத்தில் உள்ள தெற்குப் பகுதி 1-ம் எண் வாக்குச் சாவடி மையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களித்த ஆனந்தன் தனது கையை உயர்த்தி இரட்டை இலை சின்னத்தைக் காண்பித்தார்.
அப்போது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பூத் ஏஜென்ட் சக்தி என்பவர், வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உடன் வந்தவர்களை வெளியேறச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி கம்யூனிஸ்ட் - அதிமுகவினர் இடையே கைகலப்பாக மாறியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து காவல்துறையின் தலையீட்டுக்குப் பின்னர் அமைதி திரும்பியது.
வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தனது வாக்கை அளித்த பின் தனது கையை உயர்த்தி இரட்டை இலை சின்னத்தைக் காண்பித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago