வருமான வரித்துறை சோதனை மூலமாக தேர்தல் பிரச்சாரத்தைத் தடுக்க முயற்சிப்பதாக, கதிர் ஆனந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடத்தப்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், வேலூர் தொகுதி திமுக வேட்பாளரும், துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் வீட்டிலும் கல்லூரியிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கதிர் ஆனந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்து முன்பு இதுதொடர்பாக முறையீடு செய்யப்பட்டது.
அதில், தற்போது தேர்தல் நேரத்தில் வருமான வரி சோதனை நடைபெறுவதால் வேட்பாளர் தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி அனிதா சுமந்து இதை மனுவாகத் தாக்கல் செய்யுமாறும், நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் ஒப்புதல் அளித்தார்.
ஒரே டம்ளரில் 5 சுவை: ‘லேயர் டீ’யில் அசத்தும் மாணிக்கம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago