நடிகர், நடிகைகள் இல்லாததால் களைகட்டாத தேர்தல் பிரச்சாரம்

By இ.ஜெகநாதன்

தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர், நடிகைகளை ஈடுபடுத்த பிரதான கட்சிகள் விரும்பாததால் இந்தத் தேர்தல் களைகட்டாத தேர்தலாக உள்ளது.

கடந்த காலங்களில் தேர்தல் என்றாலே நடிகர், நடிகைகளின் பிரச்சாரம் களைகட்டும். பிரதான கட்சிகளின் பிரச்சார பீரங்கிகளாக சினிமா நட்சத்திரங்களே இருந் தனர். அவர்களை பார்ப்பதற் காகவே கூட்டம் கூடும் என்ப தால் பிரச்சாரத்தில் நடிகர், நடிகை களுக்கு முக்கிய இடமுண்டு.

திமுகவின் பிரச்சார பீரங்கியாக எம்ஜிஆர் இருந்தபோது, அவ ரைப் பார்க்க மக்கள் விடிய, விடிய காத்திருப்பர். அவரை பயன்படுத்தி வாக்குகளை அறு வடை செய்து திமுக ஆட்சியைக் கைப்பற்றியது.

கடந்த காலங்களில் வடிவேலு, சிங்கமுத்து, வித்யா, குண்டு கல் யாணம், சிம்ரன், குஷ்பு, சி.ஆர்.சரஸ்வதி, பாத்திமா பாபு, குயிலி போன்ற நடிகர், நடிகைகள் பிரச்சாரத்தில் ஈடு படுத்தப்பட்டனர்.

சில ஆண்டுகளாக வாக்குக்கு பணம் என்று வாக்காளர் மனநிலை மாறி விட்டதால் அரசியல் கட்சி களும் பிரச்சாரச் செலவைக் குறைத்துக் கொண்டன. மேலும் முக்கியத் தலைவர்களின் பிரச் சாரத்துக்கு பல லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டி உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பிரச்சாரம் செய்ய, தங்குவதற்கு அறை வாடகை, சாப்பாடு செலவு, வாகன வாடகை, தொண்டர்களை அழைத்து வர என பல லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டியுள் ளது.

தேர்தல் ஆணைய கெடுபிடி யால் அதற்கான செலவு அனைத் தும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படுகிறது. வேட்பாளர் களின் தேர்தல் செலவும் அதிகரிக்கிறது. இதனால் இந்த தேர்தலில் பெரிய அளவில் நடிகர், நடிகைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை. அதனால் இந்த தேர்தல் கவர்ச்சி இல்லாத தேர்தலாக மாறி விட்டது.

இதுகுறித்து அரசியல் விமர் சகர்கள் கூறியதாவது: கருணா நிதி, ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை திரைத் துறையி னரை பிரச்சாரத்தில் பயன்படுத்து வதில் ஒரு போட்டி இருந்தது. மேலும் அவர்களுக்கு கலைத் துறையினரிடம் ஒரு ஈடுபாடும் இருந்தது. இதனால் தன்னெழுச்சி யாக சிலர் ஆர்வத்தோடு பிரச் சாரம் செய்தனர். பிரச்சாரத்தில் ஈடுபடுவோருக்கு தேவையான வருமானத்தையும் கருணாநிதி, ஜெயலலிதா ஏற்படுத்தி கொடுத் தனர்.

இந்தத் தேர்தலில் கட்சி பொறுப் பில் இருக்கும் சி.ஆர்.சரஸ்வதி போன்றோர் மட்டுமே பிரச்சாரம் செய்து வருகின்றனர். கட்சியின ரும் நடிகர், நடிகைகளுக்கு செல வழிக்கும் தொகையை வாக்கா ளர்களுக்கு செலவழிக்கத் தயா ராகி விட்டனர். அதனால் இந்த தேர்தல் சினிமா நட்சத்திரங்கள் இல்லாமல் களையிழந்த தேர்த லாகிவிட்டது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்