வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள். நாமக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிகளைக் குவித்துவருகிறார். நடப்பாண்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் விருதைப் பெற்றுள்ளார் இந்த மாணவி.
நாமக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி மு.வித்யா, பேச்சுப் போட்டிகளில் 15 கோப்பைகளையும், ரூ.70 ஆயிரம் பரிசையும் வென்றுள்ளார். அவரை சந்தித்தோம்.
“சொந்த ஊர் திருச்சி மாவட்டம் உன்னியூர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் எல்லையில் அமைந்துள்ளது எங்கள் கிராமம். தந்தை அ.முருகேசன், தென்னை மரம் ஏறும் கூலித் தொழிலாளி. அம்மா போதுமணி, அக்கா சவுந்தர்யா, தம்பி ஜெகதீஸ்வரன்.
எங்கள் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தேன். ஆறாம் வகுப்பில் இருந்தே பேச்சுப் போட்டியில் பங்கேற்று வருகிறேன். மோகனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு சேர்ந்த பின்னர், அதிக அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டேன்.
தமிழ் வளர்ச்சித் துறை, வனத் துறை, கம்பன் கழகம் போன்ற அமைப்புகள், தனியார் கல்லூரிகள் நடத்திய பேச்சுப் போட்டிகளில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு, பல வெற்றிகளைப் பெற்றுள்ளேன். வனத் துறை சார்பில் நடத்தப்படும் போட்டியில், தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றுள்ளேன்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கடந்த 2014-2015-ல் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றேன். மோகனூர் ஒன்றியத்தில் பள்ளிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் 6 முறையும், 3 முறை மண்டல அளவிலும், 18 முறை மாவட்ட அளவிலும், 7 முறை மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பிடித்துள்ளேன். நடப்பாண்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘பெருந்தலைவர் காமராஜர்’ விருது வழங்கப்பட்டது பெரிதும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
பேச்சுப் போட்டி மட்டுமின்றி, பள்ளி அளவில் நாடகங்களிலும் நடித்துள்ளேன்.இதேபோல, நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் போன்ற விளையாட்டுகளிலும் பங்கேற்றுள்ளேன். மேடைப் பேச்சு மீது மிகுந்த ஆர்வம் உள்ளதால், அதில் அதிக கவனம் செலுத்துகிறேன். எதிர்காலத்தில், சிறந்த பட்டிமன்றப் பேச்சாளராக உருவாக வேண்டுமென்பதே எனது விருப்பம். மேலும், ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று, மாவட்ட ஆட்சியராக வேண்டுமென்பதும் எனது லட்சியம்.
தற்போது நாமக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறேன். பேச்சுப் போட்டியில் வெற்றிகளைக் குவித்ததற்கு, மோகனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வீ.பாக்கியம், தமிழ் ஆசிரியர் வீர.ராகவன் ஆகியோர் முக்கியக் காரணமாக இருந்தனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago