கடந்த 2014 மக்களவை தேர்தல் பிரச் சாரத்தில் பாஜகவின் தமிழக மீனவரணி சார்பில் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் கடல் தாமரை பொதுக் கூட்டம் பாம் பனில் நடைபெற்றது.
இதில் சுஷ்மா ஸ்வராஜ் பேசும் போது, மத்தியில் பாஜகஆட்சிக்கு வந்தால் உடனடியாக மீன்வளத் துறையை உருவாக்கி அதற்கு தனி அமைச்சர் நியமிக்கப்படுவார், கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் பாதுகாக் கப்படும் என வாக்குறுதி அளித் தார்.
அது போல ராமநாதபுரத்தில் கடந்த 17.04.2014 அன்று நடை பெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார்.
ஆனால், அந்த வாக்குறுதி களுக்கு மாறான நிலைப்பாட்டை மேற்கொண்டதால் கடந்த 5 ஆண்டு களாக இலங்கை கடற்படை யினரால் தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். தமிழக மீனவர்களுக்கு அபராதத்துடன் சிறை விதிக்கும் புதிய சட்டமும் இலங்கையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் சனிக்கிழமை பிற்பகல் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், சிவகங் கை வேட்பாளர் எச்.ராஜா ஆகியோ ரையும், நெல்லை அதிமுக வேட் பாளர் மனோஜ் பாண்டியனையும் ஆதரித்து பிரதமர் மோடி பேசினார்.
அப்போது, அவர் பேசியது: கடுமையாக உழைக்கும் மீனவர்களுக்காக புதிய பாதை களை உருவாக்கிக் கொண்டிருக் கிறோம். மே 23-ம் தேதி பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் மீனவர்களுக்கு தனி அமைச் சகம் அமைக்கப்படும். கிசான் கிரெடிட் கார்டு பலன்கள் மீனவர் களுக்கும் நீட்டிக் கப்படும். மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நவீன கருவிகள் அளிக்கப்படும். மாநில மொழி யில் அறிவுரைகள் கூறும் கருவி கள் இஸ்ரோ உதவியுடன் அளிக்கப் படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முகையூர் துறைமுகப் பணிகள் விரைவில் செயல்ப டுத்தப்பட உள்ளன. 2014-ல் இருந்து இதுவரை 1900 தமிழக மீனவர்களை இலங்கை வசமி ருந்து மீட்டுள்ளோம்” என மீனவர் களுக்கான திட்டங்களை பட்டிய லிட்டார். ராமநாதபுரம் தொகுதியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர் வாக்குகள் உள்ளன. பாஜகவுக்கு எதிராக அதிருப்தியில் இருந்த மீனவர் களின் வாக்குகள், பிரதமர் அளித்த வாக்குறுதியால் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாறுமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago