அரசியல் ஆதாயத்துக்காக பெண்களை ‘கட்சியினராக’ சித்தரிக்கும் பிரச்சாரக் களம்- மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு

By என்.கணேஷ்ராஜ்

பிரச்சாரக் கூட்டத்துக்காக பெண்களை அதிகளவில் அழைத்து வந்து வெயிலில் பல மணி நேரம் நிற்கவைக்கும் நிலை இந்த தேர்தலில் அதிகரித்துள்ளது. இதற்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவி த்துள்ளன.

ஆரம்பகால அரசியலில் தலைவர், பேச்சாளர்களிடம் தனித்திறன் இருந்தது. அடுக்குமொழி பேச்சு, கவிதை நயமான சொல்லாடல், நகைச்சுவை என்று பல்வேறு விஷயங்கள் பொதுமக்களைக் கவர்ந் திழுக்கும் அம்சங்களாக இருந்தன. இதனால் பிரச்சாரத்தில் இன்று பேச வருபவர் யார் என்பதை அறிந்து அதற் கேற்ப ‘தாங்களாகவே’ விரும்பி வந்தனர்.

காலப்போக்கில் இந்நிலை மாறியது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு பிரச்சாரக்களத்தின் தன்மை முற்றிலும் மாறிவிட்டது. மேலும் அரசியல்வாதிகளின் மீதான நம்பிக்கை குறைந்து, அவர்கள் மீதான விமர்சனங்களும் அதிகளவில் முன் வைக்கப்படுகின்றன.

இதனால் ‘தானாகச் சேர்ந்த கூட்டம்’ என்ற நிலை மாறிவிட்டது. ஆனால் அரசியல்வாதிகளின் மனநிலை என்னவோ கூட்டத்தை மையப்படுத்தியே இருந்தது. அதனால், கடந்த சில ஆண்டுகளாகவே பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வரும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தத் தேர்தலில் இது வெகுவாக அதிகரித்து விட்டது. குறிப்பாக பெண்களை அழைத்துவருவதில் பிரதானக் கட்சிகள் இடையே கடும் போட்டியே நிலவுகிறது. தேனி தொகுதியைப் பொறுத்தளவில் விஐபி தொகுதியாக மாறி உள்ளதால் விஐபி பேச்சாளர்கள், மேல்மட்டத் தலைவர்கள் பலரும் வருகின்றனர். இதற்காக ரூ.200 முதல் ரூ.500 வரை கொடுத்து பெண்கள் அதிகளவில் திரட்டப்படுகின்றனர்.

தற்போது வேலைவாய்ப்பும் குறைந்துள்ளதால் பொருளாதாரச் சூழல் கருதி பலரும் ‘கட்சியினராக மாறி’ பல மணி நேரம் பொதுவெளியில் காத்திருக்கும் நிலையில் உள்ளனர். இதற்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து தமிழ் மாநில பெண்கள் இயக்கத் தலைவர் அருண்மொழி கூறுகையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களை அரசியல்வாதி கள் தேர்தல் கூட்டங்களுக்கு பயன் படுத்திக் கொள்கின்றனர். முன்பெல்லாம் கிராமங்களில் மட்டுமே இதுபோன்ற நிலை இருக்கும். தற்போது அனைத்துப் பகுதிகளிலும் அதிகரித்துவிட்டது. பெண்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் அவர்களை பொருளாதாரரீதியாக மேம்படுத்தும் திட்டங்களை அறிவிக்கலாம். மதுவிலக்கை அமல்படுத் தலாம் என்றார்.

தேனி தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் ரேணுகாதேவி கூறுகையில், திரைப்படம் போன்றவற்றி ல்தான் பெண்களை வேடிக்கைப் பொரு ளாக பயன் படுத்துகின்றனர். இந்நிலையில் அரசி யல் களத்திலும் பெண்களை ‘கட்சியினர் போன்று’ காட்சிப்படுத்துகின்றனர். அவர்களின் சுயசார்பை வளர்க்கும் வகையில் திட்டங்களை வகுக்கலாம். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தலாம். அதைவிடுத்து கடும் வெயிலில் இவர்களை பல மணி நேரம் காத்திருக்க வைப்பது சரியல்ல. ‘கூட்டம்தான் ஓட்டு’ என்று பழைய மனோநிலையில் இருந்து கட்சிகள் விடுபட வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்