திருநகர் சம்பவம் எதிரொலி: நெடுஞ்சாலை கொள்ளையர் பட்டியல் தயாரிக்கும் மதுரை போலீஸ்

By என்.சன்னாசி

மதுரை அருகே தனியார் ஊழியரை விபத்தில் சிக்க வைத்து, மொபைல்போனை திருடிய சம்பவம் எதிரொலியாக நெடுஞ்சாலை கொள்ளையர் குறித்த பட்டியலைத் தயாரிக்க போலீஸாருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

மதுரை திருநகரைச் சேர்ந் தவர் பாஸ்கரன் (50). இவர் அண்ணாநகரில் லேப்–டெக்னீ ஷியனாக பணிபுரிந்தார். வேலை முடிந்து கடந்த ஏப். 23-ம் தேதி அதிகாலை, தனது பைக்கில் வீட்டுக்குச் சென்றபோது, திருநகர் ரோட்டில் கிடந்த கற்கள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். சம்பவ இடம் அருகில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலைய சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் சாலை நடுவே ஒருவர் கற்களை போட்டு விபத்தை ஏற்படுத்தி பாஸ்கரனின் மொபைல்போன், பேக்கை திருடிச் செல்வது வீடியோவில் பதிவாகி இருந்தது. கரிமேடு போக்குவரத்து பிரிவு போலீஸார் நடத்திய விசார ணையில், இச்சம்பவத்தில் தனக் கன்குளம் பர்மா காலனியை சேர்ந்த ராஜா (38) என்பவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இதே போன்று நெடுஞ்சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி வழிப்பறி, கொள்ளைகளில் ஈடுபட்ட சம்பவங்கள் பற்றி விசாரிக்க திட் டமிட்டுள்ளனர். இது தொடர்பாக தென்மாவட்டங்களிலுள்ள அந்தந்த காவல் நிலையங்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. மதுரை நகர் காவல்துணை ஆணையர் சசிமோகனிடம் கேட்ட போது, ‘‘பாஸ்கரன் சம்பவத்தில் குற்றம் புரிந்தவர் கைது செய்யப்பட்டாலும், அவரிடம் விசாரித்த வரையிலும், ஏற்கெனவே இது போன்ற சம்பவத்தில் அவர் ஈடுபட்டது மாதிரியான தகவல் இல்லை. இருப்பினும், கடந்த 3 ஆண்டில் மதுரை நகர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோட்டில் கற்கள், தடைகளை ஏற்படுத்தி விபத்துகள், திருட்டு சம்பவம் குறித்து தகவல் சேகரிக்க போலீஸாருக்கு உத்தர விடப்பட்டுள்ளது. திருநகர் சம்பவத்தை ஒத்துப்போகும் வகையில் இருந்தால், அதுபற்றி விசாரிக்கப்படும். இதுபோன்ற வழக்கில் சிக்கியவர்கள் விவரமும் சேகரிக்கப்படும் என்றார்.

ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும்

சமம் குடிமக்கள் இயக்க மாநிலத் தலைவர் ராஜன் கூறியது: பாஸ்கரன் உயிரிழந்த சம்பவத்தால் அவரது குடும்பமே சோகத்தில் உள்ளது. உயிருக்குப் பாதுகாப்பற்ற சூழலை இச்சம்பவம் காட்டுகிறது. நூதனக் கொள்ளை அடிக்க திட்டமிடுபவர்கள் மற்றவர்கள் உயிரைப் பறித்துக்கூட திட்டமிட்டு கொள்ளையடிப்பது மிக மோசமானது.

பாஸ்கரன் குடும்பத்தினர் முழுமையாக விசாரிக்க வேண்டும் என புகார் அளித்த பிறகே, சிசிடிவி கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். செயற்கையாக விபத்தை ஏற்படுத்தி கொள்ளையில் ஈடுபட்ட நபர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதுபோன்ற செயல்களில் எத்தனை பேர் கூட்டாக ஈடுபட்டுள்ளனர் என்பதை போலீஸார் விசாரிக்க வேண்டும். பாஸ்கரனின் குழந்தைகள் படிப்பை அரசு ஏற்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் போலீஸார் இரவு ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்