மதுரை தொகுதியில் தேர்தல் செலவுக்குப் பணம் தராததால் காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரத்தில் சுணக்கம் காட்டி வருகின்றனர். திமுக கூட்டணியில் மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளராக சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். மார்க்சிஸ்ட் சார்பில் ஊழியர் கூட்டங்கள், பிரச்சாரம் நடைபெற்றாலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் போதிய ஆர்வமின்றி உள்ளனர். காங்கிரஸ் கட்சியினருக்கு மேலிடத் தலைவர்களோ அல்லது கூட்டணியில் இருந்தோ தேர்தல் செலவினங்களுக்குப் போதிய பணம் வழங்காததே இதற்கு காரணம் என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறியதாவது:கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரையில் கொள்கை ரீதியாக அவர்கள் கூட்டணிக் கட்சியினருக்கு பணம் தருவதுமில்லை, பெறுவதும் இல்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். இத்தகைய சூழலில் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சிதான் தேர்தல் செலவினங்களை மேற்கொள்ளும்.
எனவே, திமுகதான் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திமுகவினருக்கு வார்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியினருக்கு எதுவும் தராதாதல், முடிந்த அளவுக்கு கைக்காசை செலவிட்டு வருகிறோம். தொகுதி வாரியாக பிரச்சாரக் கூட்டங்களுக்கு கட்சியினரை அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. டீ செலவுக்குக்கூட காசில்லாத நிலையில், பிரச்சாரத்தில் சுணக்கம் ஏற்படும் நிலை உள்ளது.
பிரச்சாரத்துக்கு வரும் கட்சியினருக்கு தேவையான நிதி அளித்தால்தான் உற்சாகத்துடன் பணிபுரிவர். இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூடி ஆலோசித்துள்ளனர். விரைவில் திமுக நிர்வாகிகளிடமும் இதுபற்றி பேசவுள்ளோம் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago