தேர்தலுக்குப் பிறகு மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம்: முத்தரசன் உறுதி

வரும் மக்களவைத் தேர்தலிலும், தமிழகத்தில் 22 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்டணி வெல்லும், மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று (சனிக்கிழமை) புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரத்தில் பேசியதாவது:

"அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக ஆட்சி நடத்துகிறார் மோடி. தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் மோடி கட்டுப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் இருக்காது என்று சர்வாதிகாரமாக வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது புதுச்சேரி மாநில அந்தஸ்துக்குப் பாடுபடும். நாங்கள் மத்தியில் ஆளும் கட்சியாக வரப்போவது இல்லை. மக்களவையில் அங்கம் வகிப்போம். நாங்கள் ஆதரிக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநில அந்தஸ்து தரப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தனது தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து பற்றி தெரிவித்துள்ளதா?

மோடியிடம்  ரங்கசாமி இதைப்பற்றி சொல்ல முடியுமா? ரங்கசாமியை துரோகி என்று ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். தான் ஆட்சிக்கு வர உழைத்த தோழமைக் கட்சியான அதிமுகவுக்கு துரோகம் இழைத்ததால் என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமியை ஜெயலலிதா விமர்சித்தார். தோழமைக் கட்சிக்கே துரோகம் இழைத்தவர் மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டாரா?" என்று முத்தரசன் குறிப்பிட்டார்.

தமிழகம், புதுச்சேரியில் தற்போதைய தேர்தல் சூழல் தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, "வரும் மக்களவைத் தேர்தலிலும், தமிழகத்தில் 22 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்டணி வெல்லும், மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். எங்கள் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகளவில் உள்ளது" என்றார் முத்தரசன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்