கரூர் மக்களவைத் தொகுதியில் கடும் போட்டி நிலவும் சூழ்நிலை யில், கடந்த தேர்தலைப் போல, வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் அதிமுக வேட்பாளர் மு. தம்பிதுரை.
தொகுதி சீரமைக்குப் பிறகு கரூர் மக்களவைத் தொகுதியில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு உட் பட்ட வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இணைக்கப்பட்டது. (கரூர் மக்களவைத் தொகுதியில் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை ஆகிய தொகுதிகளும் உள்ளன).
சீரமைக்கப்பட்ட கரூர் தொகுதி யில் மூன்றாவது முறையாக களமிறங்கி உள்ளார் மு.தம்பிதுரை. இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இங்கு கடும் போட்டி நிலவுகிறது. கரூர் மக்களவைத் தொகுதியில் வேடசந்தூர் பெரிய சட்டப் பேரவைத் தொகுதியாக உள்ளது. இங்கு மட்டும் ஆண், பெண் வாக்காளர்கள் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 468 பேர் உள்ளனர். இதனால் தம்பிதுரையும், ஜோதிமணியும் வேடசந்தூரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதிலும் தம்பிதுரை அதிகமாக வேடசந்தூரை நம்பி உள்ளார். கடந்த முறை இத்தொகுதியில் மட்டும் 46 ஆயிரத்து 380 வாக்குகள் முன்னிலை பெற்றார்.
இந்த முறை வேடசந்தூர் தொகுதியில் அவர் முதல்கட்ட பிரச்சாரத்துக்கு வந்தபோது, ஆங்காங்கே கிராமங்களில் சிறிது எதிர்ப்பு காணப்பட்டது. 2-ம் கட்டமாக தொகுதிக்குள் பிரச்சாரத்துக்கு வந்தபோது லந்தக்கோட்டை கிராமத்தில் தண் ணீர் பிரச்சினையைக் காரணம் காட்டி எங்களிடம் ஓட்டு கேட்க வேண்டாம். என பெண்களை திருப்பி அனுப்பிய சம்பவமும் நடந்தது. இதனால் கடந்த முறை போல வாக்குகள் மொத்தமாக அறுவடையாகுமா என்ற சந்தேகம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. கரூர், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளில், கடந்த முறை தம்பிதுரைக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தற்போது எதிரணியில் ஜோதி மணிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதனால் வேடசந்தூரில் அதிக ஓட்டுகள் பெற வேண்டிய கட்டாயத்தில் தம்பிதுரை உள்ளார். அவர் கரூரில் ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என்பது வேடசந்தூர் தொகுதி மக்களின் கையில்தான் உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago