தேனி தொகுதியில் பிரசாரத்துக்குப் பல மணி நேரங்களுக்கு முன்பாகவே சாலைகளும், முக்கிய வீதிகளும் கட்சியினரின் கட்டுப்பாட்டில் சென்று விடுகிறது. ஸ்பீக்கர் அலறல், வாகன நெரிசல் காரணமாகப் பொதுமக்கள் பரிதவிக்கின்றனர்.
தேர்தலுக்கு பதினோரு நாட்களே உள்ள நிலையில் தேனி தொகுதியில் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இங்கு போட்டியிடும் மூன்று கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் இத்தேர்தல் திருப்புமுனையாக அமையும் என்பதால் இவர்கள் களப்பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் அதிமுக பிரச்சாரம் முன்னணியில் இருந்தது. தற்போது காங்கிரஸ், அமமுகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
நடிகர்கள் கஞ்சா கருப்பு, வையாபுரி, நடிகர்கள் வாகை சந்திரசேகர், மனோஜ்குமார், மனோ பாலா, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் தமிழ்மகன்உசேன், இயக்குநர் ஆர்வி.உதயகுமார், இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் ஜவஹர்அலி, பிரேமலதா, ஜிகே.வாசன், காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி, டிடிவி தினகரன் உட்பட ஏராளமான வெளியூர் பேச்சாளர்கள் தேனியில் பிரச்சாரம் செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இவர்கள் திறந்த வாகனத்தில் ஆங்காங்கே பிரச்சாரம் செய்தனர். மாவட்டத்தைப் பொறுத் தவரை பொதுக்கூட்டம், தெருமு னைப் பிரசாரத்துக்காக தேனி தொகுதியில் 24, போடியில் 41, உத்தமபா ளையத்தில் 43, ஆண்டிபட்டியில் 14, பெரியகுளம் தொகுதியில் 13 என 135 இடங்கள் அனுமதி க்கப்பட்டுள்ளன.
இதில் பெரும்பாலான இடங் கள் பல தேர்தல்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டவை. அப்போது வாகன எண்ணிக்கை, மக்கள் தொகை ஆகியவை குறைவாக இருந்தன. ஆனால் இன்றைக்கு பல மடங்காக அதிகரித்து விட்டன. குறிப்பாக இந்த இடங்கள் நகரின் முக்கிய வீதிகள், தலைவர்கள் சிலைகள், பிரதான சாலைகளிலே அமைந்துள்ளன. பேச்சாளர்கள் வருவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பாகவே பொது மக்கள் அழைத்துவரப்பட்டு அப்பகுதியில் நிறுத்தப்படுகின்றனர். நேரம் ஆகஆகத் தொண்டர்களும், கூட்டணிக் கட்சியி னரும் குவிவதால் அப்பகுதி அசாதாரண நிலைக்கு மாறி விடுகிறது. ஸ்பீக்கர்களின் அலறல், மேளதாளம், விசில், உற்சாக ஆட்டம் என்று பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. மேலும் மோட்டார் சைக்கிள்களில் கூட இப்பகுதியை கடக்க முடியாத அளவு கட்சியினரின் ‘செயல்பாடுகள்’ உள்ளன. இது போன்ற நிலை சமூக அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.
குறிப்பாக தேனி பங்களாமேட்டில் ஸ்டாலின் பிரசாரத்தின்போது போக்குவரத்து மாற்றம் செய் யப்படவில்லை. நேரு சிலை வரை இருந்த கூட்டத்தினால் ஏராளமான வாகனங்கள் சிக்கித் தவித்தன. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு பேருந்துகளும், கார்களும் பின்னால் சென்று மாற்றுப் பாதையில் பயணித்தன. இதேபோல் சீமான் பிரச்சாரத்திலும் தொண் டர்களின் வாகனங்களால் இடையூறு ஏற்பட்டது. டிடிவி தினகரன், பிரேமலதா என்று ஒவ்வொரு தலைவர்களின் வருகையின்போதும் தொகுதியின் போக்குவரத்தும், அமைதியும் சீர்குலைந்து வரு கிறது.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா அல்லி நகரம் பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பேச அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அவர் வரவில்லை. அதற்குள் டிடிவி தினகரன் இப்பகுதியைக் கடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாற்றுக் கட்சி பேச்சாளர் கூட்டத்துக்குள் நுழைந்ததால் பிரச்சினை ஏற்படும் நிலை உருவானது.
சாலையின் ஒரு பகுதியை எதிரெதிர் வாக னங்கள் பயன்படுத்தியதால் 2 மணி நேரம் நெரிசல் ஏற்பட்டது. லோடு லாரிகள், சுற்றுலா வேன்கள் என்று வெகுவாய் பாதிக்கப்பட்டன. கட்டுக்கடங்கா கூட்டம், வாகன நெரிசல், ஸ்பீக்கர் அலறல் ஆகியவை பொதுமக்களுக்கு எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago