திருக்கழுக்குன்றத்தில், திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய அக்கட்சியின் எம்ஜிஆர் மன்ற செயலாளர், திருப்போரூரில் அன்புமணி தெரிவித்த கருத்தை ஆதரித்து பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.ஆறுமுகம் போட்டியிடுகிறார். அண்மையில் அவரை ஆதரித்து, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்ட பிரச்சாரத்தில் பேசினார் அன்புமணி. அப்போது ''தேர்தல் அன்று என்ன நடக்கும், பூத்தில் என்ன நடக்கும். பூத்தில் நாம்தான் இருப்போம். நம் ஆட்கள் மட்டும்தான் இருப்பார்கள். என்ன புரிகிறதா? அப்புறம் என்ன சொல்ல வேண்டுமா வெளியில்?'' என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, திமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் திருப்போரூர் சட்டப்பரவைத் தொகுதி தேர்தல் அலுவலர், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் அளித்தார். இதன்பேரில், திருப்போரூர் போலீஸார் இரண்டு பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுகவின் காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் வேலாயுதம், வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.
அப்போது,'' அன்புமணி திருப்போரூரில் கூறியதுபோல் பூத்தில் நாம்தான் இருப்போம் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்க''ள் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை தெரிவித்து பேசினார். திருப்போரூரில் அன்புமணி தெரிவித்த கருத்தை ஆதரிக்கும் வகையில் இவர் பேசியுள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. அதிமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவோம் என திமுகவினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுகவினர் மீதும் தேர்தல் அலுவலர், புகார் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago