தஞ்சாவூர் மாநகரம், நாஞ்சிக் கோட்டை, மாதாக்கோட்டை, வல்லம், பிள்ளையார்பட்டி, நீலகிரி, மாரியம்மன் கோவில், புதுப்பட்டினம், கடகடப்பை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதி.
இந்த தொகுதியில், கடந்த 2016 மே மாதம் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்தபோது, பெருமளவில் பண விநியோகம் நடந்ததாகக் கூறப்பட்டு வாக்குப்பதிவுக்கு முதல்நாள் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. அதன்பிறகு 2016 நவம்பரில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், அதிமுக சார்பில் எம்.ரெங்கசாமி வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் சசிகலாவின் ஆதரவாளராக மாறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளரான ஆர்.காந்தி, திமுக சார்பில் அக்கட்சியின் மாநகரச் செயலாளர் டிகேஜி.நீலமேகம், அமமுக சார்பில் எம்.ரெங்கசாமி ஆகியோர் உட்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் அதிமுக வேட்பாளரான ஆர்.காந்திக்கு ஆதரவாக அக்கட்சியினர் தேர்தல் பணியில் சுறுசுறுப்பை காட்டிவருகின்றனர். அதிமுகவுடன் தமாகா, தேமுதிக, பாமக சேர்ந்துள் ளதால் அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளதாக அதிமுகவினர் தெம்புடன் வலம் வருகின்றனர்.
திமுக வேட்பாளராக டிகேஜி.நீலமேகம் போட்டியிடுகிறார். பல கோஷ்டிகளின் இடையூறுகளுக்கு இடையே இங்கு போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ள இவர், அனைத்து பிரமுகர்களையும் சந்தித்துப் பேசி அவர்களின் ஆதரவைப் பெற்று பிரச்சாரத்தை சந்தித்து வருகிறார். அவருக்கு பக்கபலமாக முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் உள்ளார்.
அதிமுக சார்பில் 2014 மற்றும் 2016-ல் வெற்றி பெற்ற எம்.ரெங்கசாமி இந்த முறை அமமுக சார்பில் போட்டியிடுகிறார். கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் எளிதில் அணுகக்கூடியவர் என்ற பெயர் எடுத்தவர். அதிமுகவின் அடித்தட்டு தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறி வருகிறார்.
திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தஞ்சாவூர் தொகுதிக்கு வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுச் சென்றுள்ளனர். தொகுதிக்குத் தேவையான பல்வேறு நல்ல திட்டங்களை நாங்கள் செய்வோம் என வாக்குறுதி அளித்து 3 கட்சிகளின் வேட்பாளர்களும் முழு வீச்சில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago