காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் தேர் தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஆற்றும் உரை தொடர்ந்து தவறாக மொழி பெயர்க்கப்படுவது கடும் விமர்சனங் களுக்கு ஆளாகி உள்ளது.
கன்னியாகுமரியில் அண்மையில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத் தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி யின் ஆங்கில உரையை தமிழக காங் கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்க பாலு மொழிபெயர்த்தார். அப்போது அவர், பல இடங்களில் தவறுதலாக மொழியாக்கம் செய்தது, மக்கள் மத்தி யிலும், சமூக ஊடகங்களிலும் கடுமை யாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி உரையை காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் பேரா சிரியர் பழனிதுரை மொழிபெயர்த்தார்.
ராகுல்காந்தி நீளமாகப் பேசியதை முழுவதுமாக மொழிபெயர்க்காமல் சுருக்கி மொழியாக்கம் செய்தார். ராகுல்காந்தி பேசும்போது, ‘மோடி ரூ.35 ஆயிரம் கோடியை மேகுல் சோக்ஷிக்கு கொடுத்தார்’ என்றார். அதை, ‘மோடி ரூ.31 ஆயிரம் கோடியை நீரவ் சவுத்திரிக்கு கொடுத்தார்’ என்று தவறுதலாக மொழிபெயர்த்தார்.
அதேபோல, சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல்காந்தி பேசும்போது, ‘தமிழ்நாடு, நாக்பூரில் இருந்து இயக்கப் பட வேண்டும் என்று பாஜகவினர் விரும்புவதாகத் தெரிவித்தார். அதை, டிகேஎஸ் இளங்கோவன் மொழி பெயர்ப்பு செய்யும்போது, நாக்பூருக்குப் பதில் ‘நாகூர்’ என்று தவறுதலாகப் பேசியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து தேனி கூட்டத்தில் ராகுல்காந்தியின் உரையை காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சரியாக மொழிபெயர்த்ததால், அவரைப் பாராட்டிய ராகுல்காந்தி, மதுரை பொதுக்கூட்டத்தில், மொழிபெயர்க்க வசதியாக ஹெலிகாப்டரில் அவரை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
அரசியல் தலைவர்களின் உரையை மொழிபெயர்ப்பது என்பது ஒரு கலை. மொழி அறிவில் நிபுணத்துவம் பெற்ற வராக இருந்தாலும், அவரால் சிறப் பாக மொழிபெயர்ப்பு செய்ய முடியும் என்று கூற முடியாது. உதாரணமாக ராகுல்காந்தியின் ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமா னால், ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை பெற்றிருந்தால் மட்டும் போதாது.
காங்கிரஸ் கட்சியின் அரசியல் சித்தாந் தம் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். சமீபத்திய நாட்டின் மிக முக்கிய பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சி எடுத்த கொள்கை நிலைப்பாடு பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி அண்மைக்காலமாக ராகுல்காந்தி என்ன பேசி வருகிறார் என்பதை நாளிதழ்களில் வந்த செய்திகளைப் படித்து நன்கு உள்வாங்கியிருக்க வேண்டும்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் எனில், இதற்கு முன்பு மற்ற ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில் ராகுல்காந்தி பேசியதை ஊடகங்கள் மூலம் உற்று நோக்கியிருக்க வேண்டும். மாறாக, மொழி அறிவில் மட்டுமே புலமை பெற்ற ஒருவரால், ஒரு அரசியல் கட்சி தலைவரின் உரையை சரியாக மொழிபெயர்க்க இயலாது.
பொதுவாக தலைவர்கள் பேசி முடித்துவிட்டு, மொழி பெயர்ப்பாளர் பக்கம் திரும்புவார்கள். ‘இனி நீங்கள் மொழிபெயர்க்கலாம்’ என்பதற்கு அதுவே சமிக்ஞை. அது இல்லாதபோது தடுமாற் றம் ஏற்படும். எனவே, தலைவரின் சமிக்ஞை தவறாமல் இருந்தால் குழப்பம் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் உரையை மொழிபெயர்த்து வரும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறுகையில், “1994 ஜனவரியில் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் உரையை முதன்முதலாக மொழிபெயர்த்தேன். தலைவர்களின் உரையை மொழிபெயர்க் கும்போது அவர்களது உணர்வு மற்றும் வேகத்தை மொழியாக்கத்தில் அப்படியே கொண்டுவர வேண்டும். தொழில் ரீதியான மொழிபெயர்ப்பாளராக இருந்தா லும், கொள்கை ரீதியாக ஆழமான விஷய ஞானம் இருந்தால் மட்டுமே மொழிபெயர்ப்பு சிறக்கும்” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறும்போது, “பிரதமர்கள் இந்திராகாந்தி, நரசிம்ம ராவ், ராஜீவ்காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, இந்நாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் உரையை மொழிபெயர்த்துள்ளேன். தலைவரின் பேச்சை உயிரோட்டமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் மொழியாக்கம் செய்ய வேண்டும். மொழி பெயர்ப் பின்போது குரலில் ஏற்ற, இறக்கம் அவசி யம். சரியான தமிழ் வார்த்தை உடனடி யாகக் கிடைக்காமல் சில விநாடிகள் தடுமாறிய அனுபவமும் உண்டு. 13 மொழிகள் தெரிந்த நரசிம்மராவ் எனது மொழிபெயர்ப்பைப் பாராட்டியதை பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கூறும்போது, “எழுத்தையோ, உரை யையோ மொழிபெயர்க்கும்போது நேர்மை அவசியம். தலைவரின் உரையை அப்படியே உணர்வுப்பூர்வமாக உள்வாங்கிக் கொண்டு மொழியாக்கம் செய்ய வேண்டும். தலைவர்களின் பேச்சை தமிழக மக்களின் கலாச்சாரம், பண்பாட்டு ரீதியாக புரியும்படி மொழி யாக்கம் செய்ய வேண்டும். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர் கள் ஏ.பி.பரதன், சுதாகர் ரெட்டி போன்ற வர்களின் உரையை மொழிபெயர்ப்பு செய்துள்ளேன்” என்றார்.
மொழிபெயர்ப்பில் தவறு ஏற்படுவது குறித்து மேலும் சிலர் கூறும்போது, ‘’ராகுல் பொதுவாக தனக்காக மொழிபெயர்ப் பவர்களைப் பார்த்தே உரை நிகழ்த்துகிறார். இதனால், மொழிபெயர்ப் பவர்களும் மரியாதை கருதி அவ ரையே பார்த்துக் கொண்டிருக்க வேண் டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால், அவரது உரையின் முக்கிய வார்த்தை கள், பெயர்கள் ஆகியவற்றை குறிப்பெடுத்துக் கொண்டு மொழிபெயர்ப் பதற்கான நேரம் கிடைக்காமல் போகிறது. தங்கள் நினைவில் உள்ளதைத் திரட்டியே அவர்கள் மொழிபெயர்ப்பதால், தவறு கள் ஏற்படுகின்றன” என்றனர்.
இந்த கோணத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago