அமைச்சர், எம்எல்ஏ இடையே கருத்து வேறுபாடு: குழப்பத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர்

By எஸ்.கோவிந்தராஜ்

திருப்பூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதிகள் ஈரோடு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இதில், கோபி மற்றும் பவானி தொகுதிகள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பணனின் தொகுதி களாகும்.

பெருந்துறை தொகுதி முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலத்தின் தொகுதியாகும். ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளராக அமைச்சர் கே.சி.கருப்பணன் பதவி வகித்து வருகிறார். இவருக்கும் தோப்பு என்.டி. வெங்கடாசலத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு உச்சத்திற்கு சென்று, தற்போது இருவரும் ஒரு மேடையில் பங்கேற்பதில்லை என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

பொது நிகழ்ச்சிகளில் இருவரும் எதிர் எதிரே பார்த்தாலும் பேசிக்கொள்ளாமல், செல்லும் நிலை தொடர்கிறது. இதன்காரணமாக பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலம் மற்றும் அமைச்சர் கருப்பணனின் ஆதரவாளர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பணிகளில் இந்த மோதல் சம்பவம் எதிரொலித்து வருகிறது.

திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கடந்தவாரம் பெருந்துறையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு வந்தபோது, அமைச்சரின் ஆதர வாளர்கள் தனியாக அவருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக திரண்டு இருந்தனர். ஆனால், அவர்கள் காத்திருந்த பாதையில் வேட்பாளரை அழைத்து வராமல், மாற்றுப்பாதையில் அழைத்துச் சென்று வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியை தோப்பு வெங்கடாசலம் நடத்தினார். இதனால், அமைச்சரின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்த தகவல் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தெரிவிக் கப்பட்டதன் அடிப்படையில், அமைச்சரின் ஆதரவாளர்களுக்காக திருப்பூரில் இருந்து மீண்டும் ஒரு முறை வேட்பாளர் பெருந்துறை வந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதுபோல, பெருந்துறை தொகுதியில் எங்கு பிரச்சாரம் செய்ய வேண்டுமென மாவட்டச் செயலாளர் என்ற முறையில் தான், தான் முடிவெடுப்பேன் என அமைச்சர் கருப்பணன் வேட்பாளரிடம் வலியுறுத்தி வருகிறார்.

அதே நேரத்தில் எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலமோ, தன்னிடம் கலந்து பேசாமல் தொகுதியில் பிரச்சாரம் செய்யக்கூடாது என வேட்பாளரிடம் முரண்டு பிடித்து வருகிறார். இருவரின் பிடிவாதம் காரணமாக, அதிமுக வேட்பாளர் ஆனந்தன், யார் பக்கம் சாய்வது என குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பதாகக் கூறுகின்றனர் இதுகுறித்து பெருந்துறை எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாசலத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக சந்திக்கும் முதல் தேர்தல் இது.

இந்த தேர்தலில் வெற்றி மட்டுமே எனது குறிக்கோள். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். கழகத்தின் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து ஆதரவு திரட்டும் ஒரு கூட்டம் நடக்கிறது என்றால், யாருடைய ஆதரவாளராக இருந்தாலும், உண்மையான அதிமுகவினராக இருந்தால், அந்த கூட்டத்தில் பங்கேற்று இருக்க வேண்டும். அதை விடுத்து சாலையில் நின்று குழப்பம் ஏற்படுத்தக் கூடாது. இந்த தேர்தலில் சிறிய குழப்பம் செய்தாலும், அதன் மூலம் கட்சி வேட்பாளரின் வெற்றி பாதிக்கப்பட்டால், அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், கட்சியின் தலைமை உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்