‘எங்கள் வாக்கு எங்களுக்கில்லை’- தொகுதி மாறி போட்டியிடும் 5 வேட்பாளர்கள்

By த.சத்தியசீலன்

தொகுதி மாறி போட்டியிடுவதால், வேறு வேட்பாளர்களுக்கு வாக்களிக்க உள்ளனர், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் ஐவர்.

வரும் 18-ம் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக), மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூ.), ப.கோவிந்தன் (பகுஜன் சமாஜ்), ச.கல்யாணசுந்தரம் (நாம் தமிழர் கட்சி), இரா.மகேந்திரன் (மக்கள் நீதி மய்யம்), பு.மணிகண்டன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்களுடன் என்.ஆர்.அப்பாதுரை, கோ.கனகசபாபதி, வெ.கிருஷ்ணன், மோ.தனபால், ஏ.நடராஜன், வீ.புஷ்பானந்தம், பே.ராதாகிருஷ்ணன், யு.ராதாகிருஷ்ணன், ஆர்.ராமலிங்கம் ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் 5 வேட்பாளர்கள் தொகுதி மாறி போட்டியிடுவதால், தங்களுடைய வாக்கை வேறு வேட்பாளர்களுக்கு செலுத்த உள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக) திருப்பூர் மாவட்டம் ஷெரீப் காலனியைச் சேர்ந்தவர். இவருக்கு திருப்பூர் மக்களவைத் தொகுதியில்தான் வாக்கு உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ப.கோவிந்தன் அன்னூர் செட்டிப் பாளையத்தைச் சேர்ந்தவர். இவரது வாக்கு நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் இரா.மகேந்திரன், பொள்ளாச்சியில் உள்ள ஆர்.பொன்னாபுரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பொள்ளாச்சி தொகுதியில் வாக்கு உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் என்.ஆர்.அப்பாதுரை பொள்ளாச்சி பழனிகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர். இவர் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது வாக்கு பொள்ளாச்சியில் உள்ளது. மற்றொரு சுயேச்சை வேட்பாளரான ஆர்.ராமலிங்கம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர். இப்பகுதி நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அரசியல் கட்சி சார்பிலோ அல்லது சுயேச்சையாகவோ ஒருவர் எந்த தொகுதியிலும் போட்டியிடலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது. மக்களவைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது அரசியல் கட்சிகள் முன்கூட்டியே யூகித்திருக்கக்கூடும். விருப்பப்பட்டிருந்தால், முகவரி மாற்றம் செய்து, கடந்த பிப். 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாமில் விண்ணப்பித்து, இணைந்திருக்கலாம்' என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்