மானாமதுரையிலேயே முகாமிட்டுள்ள அமைச்சர்- அதிருப்தியில் பாஜவினர்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டப்பேரவை தொகுதியிலேயே அமைச்சர் பாஸ்கரனும், செந்தில்நாதன் எம்பியும் முடங்கி உள்ளதால் பாஜகவினர் அதிருப்தியில் உள்ளனர்.

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளில் குறிப்பிட்ட தொகுதிகளில்  வென்றால் மட்டுமே, அதிமுக ஆட்சியை தக்க வைக்க முடியும். இதனால் அதிமுக   இடைத்தேர்தல் தொகுதிகள் ஒன்றைக்கூட விட்டு கொடுக்கவில்லை.

அதேபோல் அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக, அமமுக கட்சியினரும் இடைத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

மானாமதுரையில்  அதிமுகவில் நாகராஜனும், திமுகவில் இலக்கியதாசனும் போட்டியிடுகின்றனர்.

சிவகங்கை தொகுதியில்  ஹெச். ராஜாவுக்கும்,  கார்த்தி சிதம்பரத்துக்கும் கடும் போட்டி நிலவுகிறது.  ஆனால் அதிமுகவுக்கு  இடைத்தேர்தல் முக்கியமாக உள்ளதால் அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்பி மானாமதுரை தொகுதியிலேயே   முடங்கியுள்ளனர். மேலும் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை தொகுதி அதிமுக நிர்வாகிகளும் மானாமதுரையில் முகாமிட்டுள்ளனர்.  செயல்வீரர்கள் கூட்டம், முக்கியத் தலைவர்கள் வந்தால் மட்டுமே சிவகங்கை  தொகுதி பக்கம் தலைகாட்டுகின்றனர்.

பாஜகவினர் தேர்தல் பணிக்கு அதிமுகவையே முழுமையாக நம்பியுள்ளதால் அதிருப்தியில் உள்ளனர். 

இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறிய தாவது: எங்களுக்கு இடைத்தேர்தல் வெற்றி தான் முக்கியம். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் போல் ஆகிவிடக் கூடாது என்பதில் தலைமை கவனமாக உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்