ஒருபுறம் ரயில் தடம்புரளுதல், மின்வயர் அறுந்து போதல் போன்ற காரணங்களால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மறுபுறம் அந்தச் சம்பவத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்படும் ரயில்வே ஊழியர்களும் தண்டனையால் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடப்பது ஏன்? என்று விசாரித்தபோது பராமரிப்புப் பணியில் உள்ள பிரச்சினைகளே காரணம் என தெரியவந்துள்ளது.
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் அத்திப் பட்டு – எண்ணூர் இடையே மின்சார வயர் சனிக்கிழமை அறுந்துவிழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே எக்ஸ் பிரஸ் ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்ட போதிலும் ஓரிரு மணி நேரம் தாமதமாகவே சென்ட்ரல் வந்தடைந்தன. ஆனால், மின்சார ரயில் போக்குவரத்து 8 மணி நேரமாக தடைபட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் சென்ட்ரல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸிலும், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத் திலும் ஆர்ப்பாட்டம் நடத்தி, ரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டனர். மின்சார வயர் அறுந்து விட்டதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டதாகக் கூறிய அதிகாரிகள், எப்போது சரியாகும் என்று தெரிவிக்கவில்லை. இதனால், பயணிகள் செய்வதறியாமல் குழப்பத்துடன் பெரிதும் அவதிப் பட்டனர். சனிக்கிழமை மாலை 4 மணிக்குப் பாதிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து இரவு 11 மணிக்குத்தான் சீரானது.
இதுபோல கடந்த 12-ம் தேதி காலை அரக்கோணம் – காட் பாடி இடையே மின்சப்ளை திடீரென நின்றுவிட்டதால் அந்தப் பாதையில் மின்சார ரயில் மற்றும் எக்ஸ் பிரஸ் ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சில மணி நேரத்துக்குப் பிறகே சீரானது.
கடந்த மாதம் சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரிக்கு சென்ற ஆய்வு வாகனம் தடம் புரண்டது. அந்த சம்பவத்துக்குப் பொறுப்பானவர் இப்போது விசாரணை வளையத்தில் இருக் கிறார். சமீபத்தில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வந்த சென்னை ரயில்வே கோட்ட மேலாளரின் ஆய்வு வாகனம், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை திரும்பும்போது, அங்கே தொழில்நுட்பக் கோளாறால் சிக்னலில் பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி சென்ற மின்சார ரயில்கள் ஓரிரு மணி நேரம் பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து ஏராளமான மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படு கின்றன. “லைன்கெப்பா சிட்டி”க்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்படுவதால், பராமரிப்புப் பணிகளுக்கு போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை. அத்து டன் பராமரிப்புப் பணிக்குத் தேவையான ஊழியர்களும் இல்லை. மேலும் ஆயுள் முடிந்த உபகரணங்கள் அல்லது தரம் குறைந்த உபகரணங்களை பயன்படுத்துவதாலும் பிரச்சினை ஏற்படு வதாக புகார் எழுந்துள்ளது. அது குறித்தும் விசாரித்து வருகிறோம்.
மின்சார ரயிலில் உள்ள பென்டோகிராப் (மின்சார ரயிலை யும் உயர்அழுத்த மின்கம்பியையும் இணைக்கும் கருவி) மின்வயர் அறுந்துவிடும்போது அதிலே சிக்கிக் கொள்கிறது. இதனால் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறால் சிக்னல் பிரச்சினைகள் எழுகின்றன.
இதைச் சமாளிப்பதற்காகத்தான் தண்டவாளம், சிக்னல், ஓவர்ஹெட் எக்யூப்மென்ட்ஸ் (எலக்ட்ரிக்கல் வயர்) போன்றவற்றை ஒரே நாளில் பராமரிப்புச் செய்கிறோம். மனிதத்தவறால் ரயில் போக்குவரத்து பாதிக் கும்போது அதற்கு காரணமா னவர்கள் மீது நடவடிக்கை எடுப் பதைத் தவிர வேறு வழி யில்லை. முடிந்தவரை பயணி களுக்குப் பாதிப்பு இல்லாமல் ரயில் போக்கு வரத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago