மதுரையில் பவர் கட்: அதிமுகவினர் மீது சந்தேகம் கிளப்பும் திமுக எம்எல்ஏ

By ஸ்கிரீனன்

மதுரையில் மின்சார நிறுத்தம் செய்தது, அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்யத்தான் என்று சந்தேகம் கிளப்பியுள்ளார் திமுக எம்எல்ஏ பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று (ஏப்ரல் 16) மாலையுடன் முடிவடைந்தது. நாளை (ஏப்ரல் 18) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிப் பிரசாரத்தில் கரூரில் பெரும் பிரச்சினை உருவானது.

அதனைத் தொடர்ந்து கனிமொழி வீட்டில் வருமானவரி சோதனை, ஆண்டிபட்டியில் துப்பாக்கிச் சூடு என்று சர்ச்சையுடனே தேர்தல் பிரச்சாரம் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதுரையில் நேற்றிரவு (ஏப்ரல் 16) மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

இது அதிமுகவினர் பணம் தருவதற்காகத் தான் என்று திமுக எம்எல்ஏ பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது ட்விட்டர் பதிவில், ''மதுரையில் இன்றிரவு தொடர் மின்சார நிறுத்தம். அதிமுக வாக்காளர்களுக்குப் பணம் தர மின்சார வாரியம் வசதி செய்துள்ளது.

எப்படியும் பிழைப்பு நடத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த நிலைக்கும் தாழ்ந்து செல்வார்கள். பாசிசத்தையும் அதன் கொத்தடிமைகளையும் மக்கள் திரும்ப அனுப்ப முடியாமல் தடுப்பார்கள். ஆனால் அன்னை மீனாட்சியின் அருளால் அவர்கள் வீழ்வார்கள்'' என்று பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்