தேர்தல் பிரச்சாரத்தில் மாவட் டத்துக்கு ஒன்றிரண்டு இடங்களைத் தேர்வு செய்து ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் முதல்வர் பழனிசாமியோ ஊர், ஊராகச் சுற்றி பிரச்சாரம் செய்கிறார். இருவரில் யாருடைய பிரச்சார உத்தி பலன் அளிக்கும் என்ற கேள்வி அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் முதல்வர் பழனிசாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரச்சா ரத்தை முடிக்கும் தருவாயில் உள்ளனர். ஸ்டாலின் முக்கியத் தலைவர்களைப்போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிரண்டு இடங்களைத் தேர்வு செய்து பிரச்சாரம் செய்கிறார். மேலும் தொடக்கத்தில் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர், சில நாட்களுக்குப் பின் இடைத்தேர்தல் தொகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்தார்.
இடைத்தேர்தலில் நேரடியாக அதிமுக, திமுக மோதும் நிலை யில் அத்தொகுதிகளை ஸ்டாலின் புறக்கணித்தது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பழனிசாமியோ ஒவ் வொரு மாவட்டத்திலும் 3 முதல் 14 இடங்களில் பிரச் சாரம் செய்தார். குறிப்பாக இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இதன் மூலம் இடைத்தேர்தல் தொகுதிகளில் அதிமுகவினர் உற்சாகத்துடன் செயல்பட்டு வரு கின்றனர்.
அதே நேரம், ஸ்டாலினும், பழனிசாமியும் பிரச்சார வியூகத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் தனிநபர் தாக்குதலுக்கே முக்கியத்துவம் அளித்து வருகி ன்றனர். கடந்த காலங்களில் நடை பெற்ற பிரச்சாரக் கூட்டங்களில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களது ஆட்சியில் செயல்படுத் தப்பட்ட திட்டங்கள், எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் புதிய திட்டங்கள் பற்றித்தான் இரு கட்சி களின் தலைவர்கள் பேசி வந்தனர்.
ஆனால் இந்தத் தேர்தலில் பழனிசாமி, ஸ்டாலின் ஆகிய இருவரும் தனிநபர் தாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதுபோன்ற பிரச்சார வியூகங்கள் பலனளிக்குமா என்ற கேள்வி, அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago